Kallakurichi

News November 14, 2024

கள்ளக்குறிச்சி பள்ளிக்கு விருது

image

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதினை தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

News November 14, 2024

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான த.உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 16 17ஆம் தேதிகளில், மேலும் 23 24 தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் மாவட்டம் தோறும் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்க திமுகவினர் உதவி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

News November 14, 2024

கள்ளக்குறிச்சி அருகே நாளை மின்தடை

image

மணலூர்பேட்டை அடுத்துள்ள, தேவரடியார்குப்பம்,அரியலூரில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மணலூர்பேட்டை, சித்த பட்டினம், செல்லங்குப்பம்,சாங்கியம், தேவடியார்குப்பம்,  காங்கேயனூர்,எடுத்தனூர்,ஜம்படை,ஓடியந்தல்வாணாபுரம்,பகண்டை கூட்ரோடு,தொழு வந்தாங்கள், சின்னகொள்ளியூர்,கடுவனூர் புஷ்பகிரி,ஏந்தல் எகால் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை.

News November 14, 2024

கள்ளக்குறிச்சி அருகே விடிய விடிய கனமழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடிய விடிய மழை பெய்ததால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றன.

News November 13, 2024

2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் அமைச்சர்

image

ஆண்டுதோறும் பழங்குடியினர் நல தினம் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வரும் 15ஆம் தேதி கரியலூர் கோடை விழா அரங்கில் பழங்குடியினர் நல தினம் கொண்டாடப்படுகிறது. இதில் பழங்குடியினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவாணன் கலந்து கொண்டு 2000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

News November 13, 2024

எஸ்.பி தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 25 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

News November 13, 2024

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதை பெற தகுதியான பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரியதொண்டு செய்து தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் சான்றோர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News November 13, 2024

விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட்பட்ட ம.குன்னத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வேளாண்மை துறையின் சார்பில் வேளாண் உபகரணங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ மணிகண்ணன் ஆகியோர் இணைந்து விவசாயிகளுக்கு வழங்கினார்.

News November 13, 2024

கள்ளக்குறிச்சியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News November 12, 2024

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 

image

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!