India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மயம்பாடி ஆற்றில், கோணிப் பையில் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்டவர் யார்? கொலைக்கு என்ன காரணம்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <

தியாகதுருகம், சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சி நகருக்குள் கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சங்கராபுரம் வழியாக கரும்புலோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும். மீறினால் மோட்டார் வாகன விதிப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

பொன்னியந்தல் ஊராட்சி அதிமுக நிர்வாகி ஹரிபுத்திரன், ஜெகதீசன், ரவி ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் இன்று (மார்ச்.8) தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார். திமுகவில் இணைந்தவர்களுக்கு இரு வண்ண வேஷ்டி மற்றும் புடவை அணிவித்து எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் வரவேற்று வாழ்த்தினார்.

சின்னசேலம் அருகே நாககுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடந்த மார்ச் 7ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பாண்டியன் குப்பம் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அதன் பின்னே வந்த லாரி எதிர்பாராத விதமாக சுரேஷ் வாகனத்தின் மீது மோதியது. இதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.