Kallakurichi

News December 4, 2024

கள்ளக்குறிச்சியில் நிவாரண தொகை ரூ.2000 அறிவிப்பு

image

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஃபெஞ்சல் புயலின் தாக்கம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமாக இருந்தது. வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கின.இதனால் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய்.2,000 வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டார்.

News December 3, 2024

கனமழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக கூட்டங்கள் கனமழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து துறைவாரியாக அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் இன்று நடைபெற்றது.

News December 3, 2024

கல்வராயன் மலையில் நாளை 6 இடங்களில் மருத்துவ முகாம் 

image

கல்வராயன்மலையில் மழையின் காரணமாக மலைவாழ் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர், எழுத்தூர், ஈச்சங்காடு, கிழாத்துக்குழி, ஏட்றப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் கூறியுள்ளார்.

News December 3, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட குடும்ப அட்டைக்கு ரூ.2,000

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000, நெற்பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.17,000, உயிரிழந்த மாட்டுக்கு ரூ.37,500, 33% பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு ரூ.17,000, முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய விடு கட்டித்தரப்படும் என முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 3, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க

News December 2, 2024

திருக்கோவிலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (டி 03) திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் தாக்கம் திருக்கோவிலூர் பகுதிகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 2, 2024

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சி, தென்பெண்ணை ஆற்றில் கனமழை காரணமாக கரைபுரண்டோடும் வெள்ளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர், வருவாய்த்துறையினர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News December 2, 2024

திருக்கோவிலூரில் ஆட்சியர் ஆய்வு

image

திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிவாரண முகாமில் திருக்கோவிலூர் நகர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் முருகன் நகராட்சி ஆணையாளர் திவ்யா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News December 2, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News December 1, 2024

மீட்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையினால் உளுந்தூர்பேட்டை பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பேரிடர் மீட்பு குழு குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!