India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்மழை மற்றும் கடுங்குளிர் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 28.11.2024 மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த வாராந்திர மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை துறை, உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நகர பேரூராட்சி சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை உளுந்தூர்பேட்டையில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக மா.செயலாளர் குமரகுரு அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று தொடர் மழையின் காரணமாக உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் LKG முதல் 5ஆம் வகுப்பு வரை, உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் LKG முதல் ஐந்தாம் வகுப்பு வரை, உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா CBSE பள்ளியில் LKG (ம) UKG வரை, உளுந்தூர்பேட்டை சிவாலயா பள்ளியில் LKG முதல் 6-ம் வகுப்பு வரையும், இன்று பள்ளி நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (26.11.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது அல்லது 100 டயல் செய்யலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். கல்வராயன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி வட்டகிளை சார்பில் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களில் உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தந்தை பெரியார் விருது பெற சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த பணிகள் மேற்கொண்டவர்கள் டிச.20 ஆம் தேதிகுள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ரபிக் என்பவரை எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்து எஸ்டிபிஐ கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முகமது ரபிக் என்பவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.