India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் தினசரி குப்பைகளை சேகரித்தல் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில், தமிழ்த்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் மரபு மாணவர் மன்றம் சார்பில் தொல்லியல் கருத்தரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சி நேற்று (ஜன.10) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். இதில், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் பொன் வெங்கடேசன், கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில் நேற்று (ஜன.10) நடைபெற்றது. முகாமில், சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சங்க பணியாளர்களிடமிருந்து 4 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர்கள் சுகுந்தலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையின் இன்றைய விலை நிலவரம் (கிலோ) : தக்காளி ரூ.18க்கும், கத்திரிக்காய் ரூ. 40க்கும், அவரைக்காய் ரூ.110க்கும், வெண்டை ரூ. 40க்கும், முருங்கைக்காய் ரூ.180க்கும், முள்ளங்கி ரூ.40க்கும், மாங்காய் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்த 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான மருத்துவக் குழு தேர்வு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 112 மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ சான்றிதழ் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் மாதம் ரூ.1500 பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (10.1.2025) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கள்ளக்குறிச்சி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், சேலம், மதுரை, கடலூர், நெல்லை, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளாகக் முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எடுத்து பழமை கழித்தல் புதியன புகுத்துதல் போன்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆகையால் நமது முன்னோர்களின் வழிகாட்டுதல்படி மக்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், இணையவழி சான்றுகள், பட்டா மாற்றம், பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம், விலையில்லா வேட்டி, சேலை விநியோகம் உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.