India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தண்டலையைச் சேர்ந்தவர் கதிர்நிறைசெல்வன் (49). தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2 தினங்களாக நிம்மதியில்லாமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா சண்முகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த பணிகள் தரமற்ற முறையில் செயல்படுவதை திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டிக்கும் விதமாக அதிமுகவினர் வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
சங்கராபுரம், கடைவீதி மும்முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது +2 மாணவர்கள் 6 விலை உயர்ந்த பைக்கில், அதிக சத்தத்துடன் வேகமாக சென்றனர். போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து, உரிய அறிவுரைகளை வழங்கினர். பின்னர், கோர்ட்டில் அபராதம் செலுத்தக்கோரி, வாகனங்களை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுபோல் செய்யாதீர்கள்
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவக்குமார் – சூர்யா மகாலட்சுமி தம்பதி, கடந்த 5 வருடங்களாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். சுமார் 800 பேரிடம் கடந்த 2 வருடங்களாக சீட்டு பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் நேற்று முன்தினம் (மார்.30) கைது செய்தனர். கணவன், மனைவி இருவரும் பாஜகவில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி, நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் 18-35 வயது வரையுள்ள வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி அளித்து தொழில் வாய்ப்பிற்கு தகுதியானவர்களாக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ என்ற இணையதளத்தின் மூலம் சேரலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலையில் உள்ள தேக்குமரத்துவளவை சேர்ந்த முத்தழகு (17) வயது சிறுமி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (28). இவர் முத்தழகியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்தழகு இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் தங்கதுரை தற்சமயம் பேசவில்லை என தெரியவருகிறது. இதனால் மனவேதனையில் முத்தழகு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரியாலூர் போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை வெயிலில் பொதுமக்கள் கவனமாக இருக்க கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தி உள்ளார்.கோடைவெயில் கால துவக்கத்திலேயே வெப்ப அளவு அதிகம் உள்ளது. இதில் இருந்து தற்காத்து கொள்ள, உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ், எலுமிச்சை சாறு, இளநீர், வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்ஸி மற்றும் பழச்சாறுகளை பருக வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <
Sorry, no posts matched your criteria.