India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தலைவரை தேர்வு செய்வதற்கான நிகழ்வு நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாவட்ட தலைவராக சிராஜுதீன் என்பவர் இன்று தேர்வு செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடைகளில் திடீர் தணிக்கை விபரம், மருந்தகங்கள் ஆய்வு, வழக்குகள் விபரம், கல்லூரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம் கரியாலூர் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் புடைப்பு சிற்பத்தினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு வாரம் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. கோழி வளர்ப்போர் தங்களது கோழிகளை கோழி கழிச்சல் நோயிலிருந்து காப்பாற்ற இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கைவினை திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மண்பாண்டங்கள் செய்வோர், சிலை அலங்காரம் செய்வோர், தச்சு வேலை செய்வோர், துணி வெளுப்போர் போன்றவர்கள் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் தகுதியானவர்களாவர் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யவும்..
கள்ளச்சாராய வழக்கில் சிபிசிஐடி போலீசார் 24 பேரை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், சிபிஐ விசாரணையை தொடங்கியது. கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்பதாலும் சங்கியாக செயல்பட முடியாது என்பதாலும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருமான ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
Sorry, no posts matched your criteria.