India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு கூட்டம ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிற்மைய மேலாளர் சந்திரசேகரன் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜன.28) மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்டம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று (ஜன.27) நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பாக மொத்தம் 461 மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடுடைய 6 பேருக்கு தலா ரூ.6,000 மதிப்புள்ள காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜன.31) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
கள்ளக்குறிச்சியில் கடந்த 2024ம் ஆண்டு ஆன்லைன் மூலமாக 961 புகார்களை சைபர் கிரைம் போலீசார் பெற்றதில், 64 புகார்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 784 புகார்கள் மீது சி.எஸ்.ஆர் மட்டும் போடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.7.26 கோடி பணத்தை மக்கள் இழந்துள்ளனர். ரூ.1.78 கோடி பணம் மாற்றப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.44,144 பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ஷேர் செய்யவும்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்காக www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருந்து ஆவியூர் வரை மூன்று விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் மூன்று பேர் இன்று (ஜன.27) ஈடுபட்டுள்ளனர். இந்த பைக் ரேஸில் ஈடுபட்ட மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய 2 சிறுவர்கள் ரேஸில் ஈடுபட்ட போது சைலோம் பகுதியில் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே பு.கொணலவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் கொடுவாளால் மனைவியின் கழுத்தை வெட்டியதில் படுகாயமடைந்த அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் வட்டம், மூரார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 76ஆவது குடியரசு தின விழா மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கு.வேலுசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்களது நடன திறனை வெளிப்படுத்தினர். அதனைதொடர்ந்து, உதவி தலைமை ஆசிரியர் P.வேல்முருகன், R. வடிவேலு, A.ஸ்ரீராம், சி. இளையாப்பிள்ளை என பள்ளி ஆசிரியர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.