Kallakurichi

News September 17, 2024

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

image

கீழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா(22). இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவியை பெங்களூருக்கு கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பெங்களூர் சென்று ஜெயசூர்யாவை சங்கராபுரம் போலீசார் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தொடர்ந்து மீட்கப்பட்ட பள்ளி மாணவி அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

News September 17, 2024

வடக்கநந்தல் பகுதியில் போராட்டம் அறிவிப்பு

image

கச்சிராயபாளையம் அருகே வடக்கனந்தல் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 15ஆம் தேதி முடிவடைந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு சமுதாயப் பிரிவு பகுதிக்கு சாமி கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வந்த நிலையில், இன்று அரை நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக கூறியதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

News September 17, 2024

உளுந்தூர்பேட்டைக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக நகர செயலாளர் துரை திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக உளுந்தூர்பேட்டைக்கு இன்று மாலை அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளதாகவும், தொடர்ந்து மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் மகன் மரணம்

image

காங்கேயனுாரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் சாரதி. நேற்று மூங்கில்துறைப்பட்டில் நடந்த திருமணத்தை முடித்துக் கொண்டு இருவரும் பைக்கில் நேற்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மேலந்தல் அருகே சென்றபோது, கரும்பு ஏற்றிச் சென்ற லாரி மோதியது.அதில், பைக்கிலிருந்து கீழே விழுந்த சாரதி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சத்தியமூர்த்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

News September 17, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 4-வது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் நாளை முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை தொடர்ந்து 27 நாட்கள் நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளித்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 17, 2024

கள்ளக்குறிச்சியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேசவிரோதி என்று விமர்சனம் செய்த பாஜக பொறுப்பு குழு தலைவர் ராஜாவை கண்டித்து இன்று கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 17, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 4-வது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை தொடர்ந்து 27 நாட்கள் நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளித்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 17, 2024

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து ஆய்வு

image

கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் ஆய்வு, அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு, அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வரும் 18ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (16.9.2024) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News September 16, 2024

வடகிழக்கு பருவ மழை பாதுகாப்பு குறித்து முன்னேற்பாடுகள்

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை உடன் ஆலோசனைகள் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் முன்னேற்பாடுகள் குறித்த பாதுகாப்பு கவசங்கள் குறித்தும் தீயணைப்புத் துறையினர் செயல்முறை காண்பித்தனர்.