Kallakurichi

News April 27, 2024

சேலம்: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

சேலம் – விருத்தாசலம் ரயில் மார்க்கத்தில் சின்னசேலம், ஆத்தூர் வழியாக பயணிகள் ரயில் இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தப் பயணிகள் ரயிலை கடலூர் வரை நீட்டிக்க வேண்டும் என மக்கள் நீண்ட ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், வடலூர், நெய்வேலி வழியாக மே 2 முதல் கடலூருக்கு நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் நீண்ட ஆண்டு கால கோரிக்கை நிறைவேறி உள்ளது.

News April 27, 2024

கள்ளக்குறிச்சி அருகே 13 பேர் சிக்கினர்

image

கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று ஒரே நாளில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக கள்ளக்குறிச்சி,தியாகதுருகம், வரஞ்சரம், கீழ்குப்பம், கச்சிராயபாளையம் ஆகிய காவல் நிலையங்களில் தலா இரண்டு நபர்கள் மீதும், சின்னசேலம் காவல் நிலையத்தில் மூன்று நபர்கள் மீதும் என மொத்தம் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து; 20 பேரின் நிலை?

image

நாகர்கோயிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் பேருந்தை திருச்செந்தூரை சேர்ந்த ஹரிகரன் என்பவர் ஒட்டிச்சென்றுள்ளார்.இன்று அதிகாலை ஆசனூர் அருகே சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 26, 2024

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

2024-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக வளர்ச்சிக்காக சேவையாற்றிய 15-வயது முதல் 35-வயது நிரம்பிய நபர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் மே 15ம் தேதி மாலை 4-மணிக்குள் விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக நேரம் வெளியே செல்ல வேண்டாம். தாகத்தை குறைக்க குடிநீர் மற்றும் பழச்சாறுகள் முழுமையாக அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் வெளியே வராமல் இருப்பது மிகவும் நல்லது. இளநீர் அதிகம் பருக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

News April 26, 2024

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மாணவி குழந்தைகள் நல காப்பகத்தில் தகவல் தெரிவித்ததன் பேரில், ரமேஷ் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரமேஷ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News April 26, 2024

சின்னசேலம் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை

image

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் உற்சவ மூர்த்திகள் சீதாராம திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் தேங்காய் உருட்டுதல் மற்றும் பூ பந்து உருட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமிக்கு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: நீரில் மூழ்கி அக்கா தம்பி உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்து உள்ள ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது குழந்தைகளான சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆக இருவரும் இவர்களின் விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக நேற்று (ஏப்.24) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: நீரில் மூழ்கி அக்கா தம்பி உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்து உள்ள ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது குழந்தைகளான சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆக இருவரும் இவர்களின் விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக இன்று (ஏப்.24) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!