India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த சிவகுமார் என்ற முக்கிய குற்றவாளியை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். மேலும், ஏற்கெனவே கைதான மாதேஷ் என்பவரின் நண்பர்களான தற்போது சக்திவேல் மற்றும் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 104 பேரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் சிகிச்சையில் உள்ள 108 பேரில் 104 பேரில் உடலில் சீராக உள்ளது என கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஜிப்ரில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேர் டீஸ்சார்ச் செய்யப்பட்டு தற்போது 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து 57 பேர் உயிரிழந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மெத்தானால் சப்ளை செய்த முக்கிய நபரான சிவக்குமாரை சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் போலிசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலிசார் கள்ளக்குறிச்சி அழைத்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜெயமுருகன் மற்றும் இளையராஜா என்போரின் உயிரிழப்பிற்கு விஷ சாராயம் தான் காரணம் என உறுதியாவதற்கு முன்பே இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், புதைக்கப்பட்ட ஜெயமுருகனின் உடலை கூறாய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்னொருவரின் உடல் எரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் இன்று (ஜூன் 22) நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் இருந்தனர்.
கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் முக்கிய குற்றிவாளியான கண்ணுக்குட்டி (கோவிந்தராஜ்), 2000 ஆம் ஆண்டில் கள்ளச்சாராய வழக்கில் குண்டாஸில் கைதாகியுள்ளார். அதை தொடர்ந்து பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர்களில் பெரும்பாலானோர் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள். குறைந்த விலை என்பதாலேயே சாராயத்தை குடிப்பதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக சாராயம் விற்கும் கண்ணுக்குட்டிக்கு குடிப்பழக்கம் கிடையாது.
சின்னசேலம் அருகே நேற்று(ஜூன் 21) நள்ளிரவில் சென்னையை நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியது. அம்மையகரம் பகுதியில் வரும்போது எதிரே சென்று கொண்டிருந்த வெஹிகிள் பிரி சுற்றும் இயந்திரம் டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டு சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. காயம்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்கு அஞ்சி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய நபர் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு அஞ்சி தப்பித சுப்பிரமணி என்பவரின் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவரை மருத்துவமனை அழைத்து வந்த நிலையில் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.