India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு நிதி உதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் அளிக்கும் தேவாலயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் ஜூலை 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜீன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் பொறுப்பேற்ற பிறநாகு இன்று(ஜூன் 28) முதன்முறையாக விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து மாணவியின் தாய் செல்வியை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை என காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. “நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் 10 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாதேஷ், கோவிந்தராஜ், விஜயா, ஜோசப், ஹரிமுத்து, சின்னதுரை, கதிரவன், சிவகுமார், ஷாகுல் ஹமீது, கண்ணன் ஆகியோரை காவலில் எடுக்க அனுமதி கோரியுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2024-2025 -ம் ஆண்டிற்கு 3,500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.பிரசாந்த் அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகள் ஒப்புதல் பெறுவதற்கு வரும் ஜீன் 30 ஆம் தேதி 412 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 59 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூன் 26) காலை சேலம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமார் என்பவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏசுதாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 59 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 நபர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை இன்று மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்துள்ளது.
கள்ளச்சாராயம் விற்றதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பவரும் ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுக முன்னாள் விவசாய பிரிவு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். இவர் மீது நீண்ட காலமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அன்று அளித்து பயனடையுமாறு ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.