Kallakurichi

News June 29, 2024

கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களைவிசாரிக்க சிபிஐ மனு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான 21 நபர்களில் மீண்டும் 11 பேரை ஐந்து நாட்கள் விசாரணை செய்ய அனுமதிக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவானது ஜூலை 1ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும் இவ்வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் மற்றும் முக்கிய நபர்களை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News June 29, 2024

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்.பி

image

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்

News June 29, 2024

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஜமாபந்தி காரணமாக கடந்த சில நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News June 29, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை தேதி மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் 412 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 30 ஆம் தேதி நடைபெற இருந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஜூலை 2ஆம் தேதி நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 2024-25 ஆம் ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயரை கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டி கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.

News June 29, 2024

கண்காணிப்புக்குழு நியமனம் செய்து ஆட்சியர் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்திடும் பொருட்டு கிராம அளவிலான கண்காணிப்பு குழுவினை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் பி.என்.பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலரை தலைவராக கொண்டு இந்த கண்காணிப்பு குழு செயல்படும் என இன்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 28, 2024

விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க,  பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஏக்கருக்கு 3000 வீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதற்று, தகுதியுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

அக்னிவீர் வாய்வு தேர்விற்கு விண்ணபிக்கலாம்

image

அக்னிவீர் வாய்வு இந்திய விமானப்படை தேர்விற்கு இணைய வழியாக ஜூலை 8 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு விதமான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

News June 28, 2024

கள்ளக்குறிச்சி: அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்

image

அதிகாரிகள், ஆளும் கட்சியினர், காவல்துறை உதவியுடன் கள்ளசாராயம் காய்ச்சப்படுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணத்தின்போதே அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என இன்று ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்துள்ளார். மேலும், இந்த கள்ளக்குறிச்சி விவகாரத்தில் துறை சார்ந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா சாடியுள்ளார்.

News June 28, 2024

தனிநபர் or குழுக்கன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த தனிநபர்கள் அல்லது குழுக்கள் கடன் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!