India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள ஏந்தல் கிராமத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்ற போது அடிப்படை வசதி ஏதும் செய்து தரவில்லை என கேள்வி கேட்ட இளைஞரை திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் முருகேசன் மற்றும் மகன் ஆகியோர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏரி வண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெயராமன் (வயது29). இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அங்கு ஆன்லைன் சூதாட்டம் விளையாடி ரூ.18 லட்சம் இழந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று இரவு சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த வடசேமைபாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(40),விவசாயி. இவர் நேற்று (ஏப்.,4) தனது இரு சக்கர வாகனத்தில் சேம பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, இந்திலி, டாக்டர். ஆர். கே. எஸ்.கல்லூரி மைதானத்தில் வரும் 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு 19 வயதுக்குட்பட்டவருக்கான மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆதார் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 8300051907 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட செயலாளர் உதயசூரியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்,
வருகின்ற 9 ஆம் தேதி முக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்வராயன்மலை வட்டம், வாரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (33). இவருக்கு சொந்தமான நிலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவர் மீது மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இன்று (ஏப்ரல் 4) ஓராண்டு குண்டர் தரப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட ரோடுமாமாந்தூர் கிராம அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர் அசோக் குமார் கார்க் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வாக்கு சாவடியில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிய வசதி உள்ளதா எனவும் மேலும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை குறித்து ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு அலுவலர்களும், அஞ்சல் ஓட்டுக்களை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். இதற்கான படிவங்களை யாரிடமும் ஓட்டுக்களை ஒப்படைக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சல் ஓட்டுகள் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.