Kallakurichi

News May 17, 2024

ஒருவரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

image

பெரிய மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முருங்கை மரம் மற்றும் குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்சனையில் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து சுஜாதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணன் உட்பட நான்கு பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News May 16, 2024

துணை தேர்வுகளுக்கு விண்ணபிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,11,12-ம் வகுப்பு துணை தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்றும் தனி தேர்வாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு சேவை மையங்களுக்கு நேரில் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஆன்லைன் மூலமாக துணை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கக்கூடாது

image

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் செல்லும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுப்பது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின்படி குற்றமாகும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கக்கூடாது என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

கள்ளக்குறிச்சியின் அழகிய மேகம் அருவி சிறப்புகள்!

image

கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலையில் அமைந்துள்ளது மேகம் நீர்வீழ்ச்சி. அழகிய இந்த அருவி கொட்டும் போது வெண்மையான மேகங்கள் போன்ற பளிச்சென்ற காட்சியைத் தரும். இது 500 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டுகிறது. இதை அடைய, சற்று கடினமான மலையேற்றத்தை மேற்கொள்ள வேண்டும். உள்ளூர்வாசிகள் வழிகாட்டுதலில் செல்வது நல்லது. செப்டம்பர் முதல் இதன் சீசன் ஆரம்பிக்கிறது.

News May 16, 2024

கள்ளக்குறிச்சி: உபகரணங்கள் வழங்கிய அதிகாரி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள, உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் வாரிய களப் பணியாளர்களுக்கு தென்மேற்கு பருவ மழைக்கால முன்னெச்சரிக்கையாக கையுறை, கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை இன்று (மே.16) தமிழ்நாடு மின்வாரிய உளுந்தூர்பேட்டை செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் வழங்கினார்.

News May 16, 2024

கள்ளக்குறிச்சி மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 15, 2024

பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் – பயணிகள்  அவதி

image

கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தனியார் குடியிருப்பு எல்டிஆர் பில்டிங்கிலிருந்து செப்டிக் டேங்க் சேதமடைந்து மனித கழிவுகள் பேருந்து நிலையத்தில் புகுந்துள்ளதால் பேருந்து நிலையம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் நோயை இலவசமாக வாங்கி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

News May 15, 2024

மோசடியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர் கைது

image

திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விபத்து வழக்கில் சிக்கிக் கொண்ட வாகனத்தை எடுத்து தருவதாக கூறி லாரியின் உரிமையாளரிடம் இருந்து 8 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக லாரி டிரைவர் அளித்த புகாரின் பேரில் இன்று திருநாவலூர் போலீஸ் பத்திரிக்கையாளர் செல்வராஜை என்பவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

News May 15, 2024

வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

image

பாதூர் குறுக்கு ரோடு பகுதியில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகன மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற  விவரம் எதுவும் தெரியவில்லை. இது குறித்து எந்த பகுதியை சேர்ந்தவர் என்று திருநாவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தில் உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 14, 2024

கள்ளக்குறிச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்களில் 2024ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும்
மாணவர்கள் சேர்க்கைக்கு 8- வகுப்பு, 10- ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை
ONLINE -ல் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் பூர்த்தி
செய்து, .ஜீன் 7 தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!