Kallakurichi

News January 13, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.12) இரவு முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 12, 2026

தீ பற்றிய கார் – விரைந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர்!

image

சின்னசேலம் பஸ் நிலையம் அருகே, மூங்கில் பாடி சாலை நுழைவு வாயிலில் ஒருவர் காரை நிறுத்திவிட்டு பொருள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அந்த கார் சிலிண்டர் மூலம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த காரின் அடியில் திடீர் தீ ஏற்பட்டு எரிந்துள்ளது. அப்போது ரோந்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ஏழுமலை அதைக் கண்டு தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தார். அவருடன் போலீசார் பொதுமக்களும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

News January 12, 2026

கள்ளக்குறிச்சி: இனி தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது ஈஸி!

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 12, 2026

கள்ளக்குறிச்சி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04151-294600 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ஆட்சியர்!

image

கள்ளக்குறிச்சி: குருநாதபுரத்தில், தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க பணத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இன்று வழங்கினர். இந்த நிகழ்வில் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பனேற்று பொங்கல் தொகுப்பினை பெற்றுச் சென்றனர்.

News January 12, 2026

முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

image

கள்ளக்குறிச்சி: முத்தமிழ் சங்கம் கட்டிடத்தில், முத்தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா, கவியரங்கம் திருக்குறள் திருவிழா, கவிஞர் வெண்ணிலாவின் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு மாவட்ட முத்தமிழ் சங்கத் தலைவர் முருககுரு வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் திமுக ஒன்றிய செயலாளர் ஆறு கதிரவன் கலந்துகொண்டார்.

News January 12, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெற்றோர்களுக்கு தையல் மெஷின், முதுகு தண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News January 12, 2026

கள்ளக்குறிச்சி: இனி ஆதார் வாங்க, HI போடுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

ரேஷன் கடை திறக்காததால் மக்கள் அவதி!

image

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று, கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள நம்பர் 6 ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், காலை முதலே மழையை பொருட்படுத்தாமல் வந்த மக்கள், நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News January 12, 2026

கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!