India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் காயங்களுடன் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி, சின்னசேலம் வரிவாய் வட்டாட்சியராக பணியாற்றி வந்த ஜே. கமலகண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், புதிய வருவாய் வட்டாட்சியராக சற்றுமுன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிவா முன்னணியில் உள்ளார். இதையடுத்து திமுக வெற்றி உறுதியானதாக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தியாகத்துருகம் பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். உடன் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக பணியாற்றிய கமலக்கண்ணன், சின்ன சேலம் வருவாய் வட்டாட்சியராக இருந்த மனோஜ் முனியன் என மொத்தமாக 11 வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் இன்று(ஜீலை 13) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வட்டம் எறஞ்சி கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்காக விவசாயிகளின் பட்டா நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த பல விவசாயிகள் இன்று கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வட்டாட்சியர் பிரபாகரனை முற்றுகையிட்டு எதற்காக நிலம் ஆய்வு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (12-07-2024) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளககுறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் நடைமுறையில் உள்ள இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் அல்லது Citizen Portal https://tamilnilam.tn.gov.in/citizen வழியாக விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் என்பதால், சார் பதிவாளர் அலுவலகங்களில் தினம் ஒன்றுக்கு வழக்கமாக 100 டோக்கன்கள் மட்டும் வழங்குவர். ஆனால் இன்று(ஜூலை 12) மட்டும் 180 டோக்கன்கள் வழங்க பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இன்று ஒருநாள் 180 டோக்கன்கள் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தலைமை சார்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஜூலை 19 ஆம் தேதி அன்று தனியார் துறை வேலை முகாம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் நடைபெறுகிறது. வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் நேற்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்த காவலர்கள் 6 பேர் தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி எஸ்எஸ்ஐ ரவிச்சந்திரன் கரியாலூருக்கும், காவலர்கள் ராமதாஸ் கீழ்குப்பத்திற்கும், சீனுவாசன் கள்ளக்குறிச்சிக்கும், சிவமுருகன் வரஞ்சரத்திற்கும், மனோகரன் சி.சேலத்திற்கும், இளந்திரையன் சங்கராபுரத்திற்கும் இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ரஜத்சதுர்வேதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.