India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரிஷிவந்தியம் அரசினர் மேல்நிலைபள்ளியில் மாவட்ட சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில், சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா இணை சீருடை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காந்தி நகர் பகுதியில் இன்று (ஜூலை 28) பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த மணிகண்டன், சபரிநாதன், முரளி ஆகியோர் மீதும், மரவாநத்தம் சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமசாமி, அரவிந்த்ராஜ் மற்றும் மதியழகன் ஆகியோர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 92 புள்ளி தாள்கள் மற்றும் 600 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று ஜூலை 28-ம் தேதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2024-25 ஆண்டிற்கான காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் காரீப் பருவத்தில் சாகுபடி செய்த நெல் (சொர்ணவாரி)1, கம்பு பெயருக்கு காப்பீடு செய்யலாம் என, கள்ளக்குறிச்சி வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் கூறியுள்ளார். நெல் (சொர்ணாவாரி )1 வரும் 31.07.2024 வரையிலும், கரும்பு பயிருக்கு 16.08.2024 வரை காப்பீடு செய்யலாம் என அவர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கல்வராயன்மலையில் நேற்று, தமிழக அமலாக்கத்துறை ஏடிஜிபி அமல்ராஜ் ஆய்வு செய்தார். 30 பேரை கைது செய்தும், ஆறு நபர்களை தடுப்பு காவலில் சிறையில் அடைத்துள்ளனர் என்றும் போலீசார் கூறினர். கள்ளக்குறிச்சியில் முழுமையாக கள்ள சாராயம் ஒழிக்கப்படும் என ஏடிஜிபி அமல்ராஜ் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கெடிலம் பகுதியில் இந்தியன் வங்கி அருகே, பஞ்சர் கடை அருகில் ரூ.30,000 மதிப்புள்ள ரூ.500 ரூபாய் நோட்டு கட்டுகளை கீழே யாரோ தவறிவிட்டதாக தெரிகிறது. அது யாருடைய பணம் என்று தெரியவில்லை. பணம் தற்போது SSV பள்ளி ஓட்டுனர்கள் தாஸ் மற்றும் குட்டியிடம் உள்ளது.
பணம் தொலைத்தவர்கள் தொடர்புக்கு – தாஸ்:94861 29344, குட்டி -9597194993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
புற்றுநோயால் கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி பூர்வமாக கொண்ட சௌந்தர்யா அமுதமொழி இன்று காலமானார். அவருக்கு சிகிச்சையின் போது தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கம் சார்பாகவும் ரூ.5.51 லட்சம், முதலமைச்சர் ரூ.50 லட்சமும் நிதி உதவி அளித்தார்.
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இந்த ஆண்டிற்கான முழு நேர பட்டய படிப்பிற்கான விண்ணப்பம் கடந்த 19ஆம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், தற்போது 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட இணைபதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர் விண்ணப்பிக்க www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் வரும் 30-ம் தேதி ரிஷிவந்தியம் ஊராட்சி பெரிய கொள்ளியூர் கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி குலதீபமங்கலம் கிராமத்திலும், திருநாவலூர் ஊராட்சி திருநாவலூரிலும் , உளுந்தூர்பேட்டை ஊராட்சி நெடுமானூரிலும் , கள்ளக்குறிச்சி ஊராட்சி கரடிசித்தூரிலும் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் பாஜக சார்பில் நடத்தப்படவுள்ளது. அதற்காக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், தியாகராஜன் தலைமையில் பொதுக்கூட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் அதில் மாவட்ட துணைத் தலைவர் சர்தார்சிங் , மாவட்ட செயலாளர் ஹரி, ஒன்றியத்தலைவர் சக்திவேல்,ராம்குமார், நகர தலைவர் சூர்ய மகாலட்சுமி ஆகியோரை நியமித்து பாஜக மாவட்ட தலைவர் நேற்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.