Kallakurichi

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

image

விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்பு செட் மானியத் திட்டம், தற்போது அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது.இதில்,விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர்,வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: ரூ.32,000 சம்பளத்தில், வங்கியில் வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி இளைஞர்களே செம வாய்ப்பு..!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<>TNEB Mobile App<<>>” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி இளைஞர்களுக்கு ஆட்சியர் நற்செய்தி!

image

கள்ளக்குறிச்சி மாடூர் இந்தியன் வங்கி பயிற்சி மையத்தில், 30 நாட்கள் நடைபெறும் விலையில்லா மொபைல் போன் பழுதுபார்ப்புப் பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதில் 18 முதல் 45 வயது வரையிலான இளைஞர்கள் பங்கேற்கலாம். இத்தொழில் முனைவோர் பயிற்சியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளைப் பெறுமாறு ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News January 25, 2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை தற்போது நிலவுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.25) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் (2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: 22 பேருக்கு பாய்ந்த அதிரடி வழக்கு!

image

மதுராந்தகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் இதாயத்துல்லா தலைமையில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் உட்பட 22பேர் மீது சங்கராபுரம் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: புகையிலை விற்ற பெண் கைது!

image

திருக்கோவிலூர் அருகே அமைந்திருக்கும் அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் அவர் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் அமைந்திருக்கும் மெயின் ரோடு பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுப்பட்டார். அப்போது, பூங்கோதை என்பர் கடையில் 15 பாக்கெட்டுகள் ஹான்ஸ் வைத்திருந்ததை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தினர்.

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: தொழிலாளி ஏரியில் சடலமாக மீட்பு!

image

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் அருகே அம்மன்கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேலு (40), கடந்த 20ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி பூரணி அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜி.அரியூர் ஏரியில் வேலு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!