Kallakurichi

News January 26, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

image

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<> லிங்கை <<>>கிளிக் செய்து, வரும் பிப்ரவரி.02 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்!

News January 26, 2026

கள்ளக்குறிச்சியில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

சிறப்பாக பணியாற்றிய எஸ்ஐ-க்கு பாராட்ட சான்றிதழ்

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய லோகேஸ்வரன், சிறப்பாக பணியாற்றியதாக, இன்று நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

News January 26, 2026

மதுவிலக்கு போலீசாருக்கு பரிசு வழங்க ஆட்சியர்

image

உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் சிறப்பாக பணியாற்றியதற்காக 77 ஆவது குடியரசு தின விழாவில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உடன் இருந்தார். இந்த விழாவில் காவலர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News January 26, 2026

கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 26, 2026

கள்ளக்குறிச்சி: வீடு கட்டப் போறீங்களா? இது அவசியம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு<> -1 <<>>என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 26, 2026

கள்ளக்குறிச்சியில் விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்!

image

தியாகதுருகம் அருகே உடையனாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் தனது விவசாய நிலத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெறவில்லை என்பதால் அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பெற முயன்றுள்ளார். அப்போது ரமேஷ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

கள்ளக்குறிச்சியில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை ( 04151-294600) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

கள்ளக்குறிச்சி: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்

1. இலவச மருத்துவ பரிசோதனை

2. அவசர சிகிச்சை

3. மருந்துகள்

4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்

5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04151-222190 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

கள்ளக்குறிச்சியில் கரண்ட் கட்?

image

திருக்கோவிலூர் கோட்டம் தேவரடியார் குப்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.நாளை (ஜன.27) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மணலூர்பேட்டை, சித்தப்பட்டிணம் செல்லக்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம் போன்ற 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ரகுராமன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!