India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தியாகதுருகம் பேருந்து நிலையப் பகுதியில் மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து மத்திய பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம் இன்று ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் இயங்கும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இது மத்திய அரசின் ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரம் திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பிறவியிலேயே காது கேளாதவர்கள், கண்பார்வை குறைபாடு சிகிச்சைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை கல்லூரி முதல்வர் நேரு துவங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி வேளாண்மைத்துறையின் மூலம் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் துவங்குவதற்காக இருவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றி வந்த 13 துணை வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த இளையராஜா என்பவருக்கு துணை வட்டாட்சியர் ஆக பதவி உயர்வு வழங்கியும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 7 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்தும், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கி கல்வராயன் மலை வருவாய் வட்டாட்சியராக நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து வைப்புத்தொகை ரசீது பெற்று 18 வயது முடிவடைந்தும் முதிர்வு தொகை கிடைக்காத பயனாளிகள் முதிர்வு தொகைபெற தங்களது வைப்புத்தொகை ரசீது, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கிகணக்கு புத்தகம், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் நேற்று தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் கள்ளசாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். 67 பேர் உயிரிழந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் கடந்த 26 ஆம் தேதி கோமதி தலைமையில் விசாரணை மேற்கொண்டது. பின்பு நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது. இதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய மதுவிலக்கு பிரிவு காவலர்கள் மற்றும் பகண்டை கூட்ரோடு காவல் நிலைய காவலர் ஒருவர் என மொத்தம் 8 காவலர்கள் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் 8 பேர் மீண்டும் மாற்று காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி ரஜத் சதுர்வேதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சின்னசேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பாஜக அரசு கடந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் வேளாண்மை துறை சீரழித்து 40 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக நசுக்கியதாக தெரிவித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.