India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த வேலை வாய்ப்பு முகாமில் வேலை பெறும் நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சாத்தனூர் அணையில் தண்ணீர் குறைந்துள்ளதால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் சம்பா சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து ஆண்டு தோறும் சாத்தனூர் அணையில் தண்ணீர் நிரம்புவதால், ஐந்து வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, 98 ஏரிகள் நிரம்பும் இதனால் பத்தாயிரம் ஹெக்டேர் மேல் விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் பெண்ணையாறு வறண்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் பருவகால மழையில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் பருவ மழைக்காலம் தொடங்க இருப்பதால், நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி ஆகியோர் நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆவடி தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுஉதவியுடன் இன்னாடு, சேராப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், ட்ரோன் கேமராவை பறக்க விட்டு ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லேசான மழை பெய்யக்கூப்பிடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 11.7 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கத்தை நியமனம் செய்து தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வழக்கில், சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவு செய்ததாக பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி. சூர்யா விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். தவறான தகவலை எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக சிபிசிஐடி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி முன்னிலையில் பாஜக நிர்வாகி எஸ்ஜி. சூர்யா ஆஜரானார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில், மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த சிவகுமார், பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கிய நகரங்களைச் சேர்ந்த 9 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்துவரும் குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.