India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வரும் பொதுமக்கள் மாவட்டத்தில் நடைபெறும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களுக்கு DSP- 99948 98628, INS – 94981 68555, office – 04251 294600 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும், மேலும் dspkkidvac.tnpol@gov.in என்ற இமெயிலிலும் புகார் தெரிவிக்கலாம் என லஞ்ச, ஊழல் தடுப்புத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி காவல் மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ். குத்தாலிங்கம் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின், டி. நகர் காவல் துணை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை அமைக்கப்பட்டு வரும் இரயில்வே வழித்தட பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை வரை புதிய இரயில் பாதை அமைக்க வேண்டியும் கள்ளக்குறிச்சி எம்பி மலையரசன் ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தார்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில கூட்டத்தை கள்ளக்குறிச்சியில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறும் கூட்டத்தில் 400 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டுமென நிபந்தனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் கால்நடை சேவை திட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு நாளை (ஆகஸ்ட் 10), கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது. மேலும், விபரங்களை 91542 50856 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என கள்ளக்குறிச்சி 108 ஆம்புலன்ஸ் மேலாளர் குமரன் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்தவர ஜெஸ்பீனாமேரி. முன்னாள் ஊராட்சித் தலைவரான இவர் கடந்த 7ஆம் தேதி வீட்டிலிருந்து மூங்கில்துறைப்பட்டு செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. மாலை தொடங்கிய மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்தனர். குறிப்பாக, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி N. ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் நீதிபதி S .சௌந்தர் ஆகியோர் நாளை (09.08.2024) ம் தேதி காலை 8:30 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு ஆய்வு செய்ய வருகை தர உள்ளதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சின்னசேலம் திரு.வி.க நகரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் நேற்று மூங்கில் பாடி தேசிய நெடுஞ்சாலையில் தேநீர் அருந்துவதற்காக கடைக்கு சென்றவர் சேலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த காரில் இருசக்கர வாகனத்தில் ஜெயராமன் மீது மோதியதில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Sorry, no posts matched your criteria.