Kallakurichi

News August 21, 2024

கள்ளக்குறிச்சி மருத்துவருக்கு விருது

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பான மருத்துவ சேவை புரிந்ததற்காக கள்ளக்குறிச்சி ராஜு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பாபு சக்கரவர்த்தி என்பவருக்கு இந்து தமிழ் திசை சார்பில் மருத்துவ நட்சத்திர விருதினை இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News August 20, 2024

தங்கம் வென்ற மாணவியை பாராட்டிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நக் ஷத்ராவை இன்று ஆட்சியர் நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து ஆட்சியர் பிரசாந்த் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 20, 2024

கள்ளக்குறிச்சியில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இந்த மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கினார்.

News August 20, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள மகத்தான திட்டங்களில் ஒன்றான புதுமை பெண் திட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 3,078 பேர் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும், இத்திட்டத்தினை 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

முன்னாள் படைவீரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் ஆக. 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், அவரைச் சேர்ந்தவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை தெளிவாக இரண்டு பிரதிகள் எழுதி மனுவாக வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

News August 20, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

News August 20, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆகஸ்டு 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

திருக்கோவிலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 21.08.2024 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும் மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!