India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் ஆராம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மனப்பாச்சி கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று கூறி அவர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்த அவர் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இன்று மனப்பாச்சி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் அவர்களின் அலுவலகத்தில் இன்று பவள விழா நிறைவு மற்றும் கழக முப்பெரும் விழா முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் இருவண்ண கொடி ஏற்றவும், கொடி கம்பங்கள் புதுப்பிக்கவும் அறிவுறுத்தினார். இதில் திமுக ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் கட்சியின் பவள விழா குறித்தும், சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் பதவி காலம் 2024ஆம் ஆண்டுடன் முடிவடைவதாக தகவல் பரவியது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழக தேர்தல் ஆணையருக்கு மனு அளித்தனர். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி எங்களுக்கு ஐந்தாண்டுகள் வரை பதவி காலம் உறுதி செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் ஐந்தாண்டு காலம் பதவியை உறுதி செய்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் காரனூர் கிராமத்திலிருந்து சடையம்பட்டு அரசு கலைக் கல்லூரி பகுதிக்கு இன்று மதியம் ஆட்டோ சென்றது. அப்போது காரனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் அந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டு கல்லூரிக்கு சென்றார்கள். ஆனால் கல்லூரி அருகே சென்ற போது ஓட்டுனரின் கவனக்குறைவால் ஆட்டோ கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் சுமார் 1500 வாக்காளர்களின் தொகுதிகள் பிரிப்பது குறித்தும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 2 லாரிகள், 2 அரசு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது. திருச்சி சென்ற லாரியின் பின்புறத்தில் தனியார் பேருந்து மோதியது. அந்த லாரி, உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற மினி லாரி, தனியார் பேருந்து மீது மோதியது. இதில், ஓட்டுநர்கள், தனியார் பேருந்து பயணிகள் என 10 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 10 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கிழக்கு மருதுாரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. அப்போது விநாயகர் சிலை ஒன்று உடைந்து சேதமடைந்தது. இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. தகராறு தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது நேற்று திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர். இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டதாக மேலும் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் 347 மனுக்களை வழங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான மண்மலை, அரசம்பட்டு, மொட்டம்பட்டி, மூக்கனூர், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்படும். இதேபோல் மூங்கில்துறைப்பட்டு இருதயம்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான மூங்கில்துறைப்பட்டு, சுத்தமலை, வடமாமந்தூர், மணலூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
Sorry, no posts matched your criteria.