Kallakurichi

News September 18, 2024

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

image

திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ரூபாய் 2,64,000/- கைப்பற்றப்பட்டு சார்பதிவாளர் வேல்முருகன் மற்றும் 10 பேர் என மொத்தம் 11 பேர் மீது கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து விருத்தாச்சலம் பெரியார் நகரில் உள்ள வேல்முருகன் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News September 18, 2024

கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் இன்று தொடக்கம்

image

மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் சார்ந்த தடுப்பூசி முகாம் செப்டம்பர் 18ம் தேதி முதல் வரும் அக்.15 ம் தேதி முடிய (27 நாட்கள்) தொடர்ந்து நடக்கிறது. கால்நடைகளை வளர்க்கும் விவசாய பெருமக்கள் தங்களது கால்நடைகளுடன் தடுப்பூசி முகாமில் பங்கேற்று பயன்பெற கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

News September 18, 2024

கச்சிராயபாளையம் அருகே அரை நிர்வாண போராட்டம்

image

வடக்கனந்தல் பகுதியில் உள்ள சிவன் கோவில் சாமி வடக்கநந்தல் ஒரு சமுதாய பகுதி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சாமி வர வேண்டும் என்று பொதுமக்கள் சேர்ந்து நேற்று அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து கள்ளக்குறிச்சி விடுதலைச் சிறுத்தை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நாம் சட்டரீதியாக சந்திப்போம் என்று கூறினார். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.

News September 18, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (17.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2024

இருவரை சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திம்மலை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் சிவா ஆகிய இருவரின் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 17, 2024

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

image

கீழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா(22). இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவியை பெங்களூருக்கு கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பெங்களூர் சென்று ஜெயசூர்யாவை சங்கராபுரம் போலீசார் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தொடர்ந்து மீட்கப்பட்ட பள்ளி மாணவி அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

News September 17, 2024

வடக்கநந்தல் பகுதியில் போராட்டம் அறிவிப்பு

image

கச்சிராயபாளையம் அருகே வடக்கனந்தல் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 15ஆம் தேதி முடிவடைந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு சமுதாயப் பிரிவு பகுதிக்கு சாமி கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வந்த நிலையில், இன்று அரை நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக கூறியதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

News September 17, 2024

உளுந்தூர்பேட்டைக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக நகர செயலாளர் துரை திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக உளுந்தூர்பேட்டைக்கு இன்று மாலை அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளதாகவும், தொடர்ந்து மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் மகன் மரணம்

image

காங்கேயனுாரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் சாரதி. நேற்று மூங்கில்துறைப்பட்டில் நடந்த திருமணத்தை முடித்துக் கொண்டு இருவரும் பைக்கில் நேற்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மேலந்தல் அருகே சென்றபோது, கரும்பு ஏற்றிச் சென்ற லாரி மோதியது.அதில், பைக்கிலிருந்து கீழே விழுந்த சாரதி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சத்தியமூர்த்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

News September 17, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 4-வது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் நாளை முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை தொடர்ந்து 27 நாட்கள் நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளித்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!