India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.16) இரவு முதல் நாளை (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.16) இரவு முதல் நாளை (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

இன்று (பிப்.16) கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த வாராந்திர ஆய்வு கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விதமான சட்டமன்ற ஒழுங்கு பணிகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையங்களை இன்று (பிப்.16) தொடங்கி வைத்தார் வைத்தார். பின்னர், ஜி.அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்
புதிதாக அமைக்கப்பட்ட விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தின்
செயல்பாட்டினை ஆட்சியர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்.

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூர், கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, லாலாப்பேட்டை, சேர்ந்தாங்கல், பழைய சிறுவாங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், பிரிதிவிமங்கலம், மடம், வீரசோழபுரம், பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாட்கோ சார்பாக ஆதி திஒராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் – ஏ.ஐ பயிற்சி வழங்கப்பட உள்ளது. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் www.tahdco என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாக்டோ மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.