India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர். மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் வாக்குச்சாவடிக்கு 3 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று தொடங்கியது.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜா என்கின்ற ராஜா கிருஷ்ணனை இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் நியமித்துள்ளார். அவருக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள், கல்வி நிறுவனத்தினர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்த காரணத்திற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்து பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் மேலும் 1 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தல் பிப்.5 நடக்கிறது. இதில் தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா? போன்றவற்றை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் செலவின பார்வையாளராக தினேஷ்குமார் ஜாங்கிட், தேர்தல் பொது பார்வையாளராக அஜய்குமார் குப்தா, தேர்தல் காவல் பார்வையாளராக சந்தனா தீப்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கில் வரும் பிப்.5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் பரவி வருகிறது. அதில், இந்தி-க்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக தற்போது இந்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெரியார் பற்றி தவறாக பேசி, சீமான் தன்னை பெரிய தலைவராக காட்டிக்கொள்வதாகவும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அரசியல்வாதி போலவும், சீமானை போலவும் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பவானி சாலையில் நேற்று இரவு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் சீமான், திமுகவை அகற்றாமல் தமிழகத்திற்கு விடிவு இல்லை. நல்லாட்சியும் கிடைக்காது. திராவிடம் தளர்ச்சி அடையும்போது தமிழ்தேசியம் எழுச்சி பெறுகிறது. திராவிடத்தின் குறியீடாக பெரியார் ஈவெராவை எதிர்க்க தமிழ்த்தேசியத்தின் அடையாளம் பிரபாகரன் பின்னால் உள்ளோம் என்றார்.
ஈரோட்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரிகள் நவீன் அளித்த புகாரில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, எங்களுக்கு மைக், பைக், செங்கல் என எந்த சின்னம் கொடுத்தாலும் முக்கியமில்லை. மக்களின் எண்ணம்தான் முக்கியம். 50 ஆண்டுகளாக உள்ள திராவிட குப்பையை உரமாக்கி தமிழ் தேசிய மரத்தை வளர்ப்பேன். பெரியாரை பற்றி பேசி வாங்கும் ஓட்டு எனக்கு தீட்டு, என்றார்.
ஈரோடு தவெகவில் சாதி பார்த்தும், பணம் கொண்டவர்களுக்கு மட்டும் பதவி அளிக்கப்படுகிறது என ஆதங்கத்தால் 25 வருட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஆனந்தகுமார், அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஈரோட்டில் உழைப்பு (ம) அனுபவத்தில் மூத்தவன் என்கிற முறையில் மா.செயலாளர் பொறுப்பு கேட்டு விருப்பமனு வழங்கியிருந்தேன். பணம், சமூகத்தை காரணம் காட்டி பொறுப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.