India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை, வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். அவர் கட்சித்துண்டுடன் வந்ததால், அவரை வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கவில்லை. பின், கழுத்தில் இருந்த கட்சி துண்டை கழற்றிய பிறகு, வாக்குச்சாவடிக்கும் அனுமதிக்கப்பட்டார். காவல்துறை பாரபட்சம் பார்ப்பதாக சீதாலட்சுமி குற்றம் சாட்டினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 1 மணி நிலவரப்படி 42.41 சதவீதம் வாக்குபதிவாகியுள்ளது. இத்தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 இடைத்தேர்தல் நிறைவு பெற்றதும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 26.03 சதவீதம் வாக்குபதிவாகியுள்ளது. இத்தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,10,128 ஆண்களும், 1,17,381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 85 வயதுக்கு மேற்பட்ட 209 பேரும், மாற்றுத்திறனாளிகள் 47 பேரும் என மொத்தம் 256 வாக்காளர்கள் தபால் ஓட்டுப்போட விண்ணப்பம் கொடுத்தனர். இதில் 246 பேர் தபால் வாக்கு செலுத்தி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.95 சதவீதம் வாக்குபதிவாகியுள்ளது. இத்தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று தற்போது (பிப்.5) தொடங்கியது. இத்தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிடுகின்றனர். 237 வாக்குசாவடிகளில் 2,678 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் முடிவு பிப்.8ஆம் தேதி ஆகும்.
பவானிசாகர் அருகே சேலம் மேச்சேரியை சேர்ந்த தர்னிஷ் சாய் க்ரசாத் (21). இவர் ஊட்டியில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ ப்ரொபஷனல் போட்டோகிராப் படித்து வருகிறார். சேலம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள மேச்சேரிக்கு மேட்டுப்பாளையம் – சத்தி ரோட்டில் காரில் சென்ற போது கார் செக் போஸ்ட் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதிய விபத்துக்குள்ளானது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று(பிப்.5) ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று(பிப்.5) மற்றும் வாக்கு எண்ணும் நாளான (பிப்.8)ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று(பிப்.5) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் ஆண், பெண் உட்பட 2.26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வாக்குப்பதிவு தொடங்கியது.
Sorry, no posts matched your criteria.