Erode

News February 8, 2025

“தேர்தல் மன்னன்” பின்னடைவு

image

ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. இதில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், “தேர்தல் மன்னன்” பத்மராஜன் 52 வாக்குகள் பெற்று 30,790 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளார். இதே போல் சுயேட்சை வேட்பாளர்கள் 5 பேர் ஒற்றை இலக்க வாக்கு பெற்றுள்ளனர். இவர் 247 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 8, 2025

ஈரோட்டில் கிடைத்த தபால் வாக்குகள்

image

ஈரோட்டில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ▶மொத்த வாக்குகள் – 251, ▶திமுக – 197, ▶நாம் தமிழர் – 13, ▶மறுமலர்ச்சி ஜனதா கட்சி – 2, ▶சாமானிய மக்கள் கட்சி – 2, ▶சமாஜ்வாடி கட்சி – 1, ▶அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் – 1, ▶ அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி – 1, ▶சுயேச்சைகள் – 8, ▶நோட்டா – 8, ▶செல்லாதவை – 18 ஆகும். தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்றார்.

News February 8, 2025

நோட்டா 3ஆவது இடம்

image

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் 26,000 வாக்குகள், நாதக 3,177 வாக்குகள் பெற்றுள்ளது. இதில் நோட்டா 600+ வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மொத்தம் 46 வேட்பார்கள் போட்டியிடும் நிலையில், நோட்டா 3ஆவது இடம் பிடித்துள்ளது.

News February 8, 2025

20,000 வாக்குகள் முன்னிலையில் திமுக

image

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் 26,000 வாக்குகள் பெற்ற்றார். நாதக 3,177 வாக்குகள் பெற்றுள்ளது. நோட்டா 500 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளது. திமுக தொடர்ந்து 20,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

News February 8, 2025

தொடர்ந்து திமுக முன்னிலை

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 3ஆம் சுற்றில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 26,495 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 3,177 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வாக்கு வித்தியாசம் 23,315 ஆகும். மொத்தம் 17 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

News February 8, 2025

இடைத்தேர்தல்: நாம் தமிழர் பின்னடைவு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்றில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 981 வாக்குகள் பெற்று பின்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் 8, 025 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News February 8, 2025

இடைத்தேர்தல்: திமுக முன்னிலை

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் 5, 211 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாதக வேட்பாளர் 981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். தற்போது வரை திமுக முன்னிலையில் உள்ளது.

News February 8, 2025

இடைத்தேர்தல்: திமுக முன்னிலை

image

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலையில் உள்ளார்.

News February 8, 2025

இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை துவக்கம்

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமாக 1,54,657 (67.97 %) வாக்குகள் பதிவானது. இதில் முதலில் பதிவான 246 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரப்படுகிறது. 8.30 மணிக்கு மின்னணு வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள WAY2NEWS பாருங்கள்.

News February 7, 2025

பெருந்துறை அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து

image

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய கெமிக்கல் டேங்கரை, வெல்டிங் வைத்து உடைக்கும் போது, தீப்பிடித்துள்ளது. அங்கிருந்த பொருட்களுக்கும் தீ பரவி எரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.

error: Content is protected !!