Erode

News February 8, 2025

‘ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போலி வெற்றி’

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் யாரும் இல்லாததால் திமுக போலி வெற்றியடைந்துள்ளது. நெல்லையில் சென்று அல்வா சாப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்துவிட்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

News February 8, 2025

தேர்தல் முடிவு அதிகார பூர்வ அறிவிப்பு!

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 20வது சுற்று முடிவு விவரம்:- சந்திரகுமார் (திமுக) – 1,15,512, சீதாலட்சுமி (நாதக) – 24,138, நோட்டா – 6,101, ஓட்டு வித்தியாசம் – 91,374 (திமுக முன்னிலை). தபால் வாக்குகள் சேர்த்து மொத்தம் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:- சந்திரகுமார் (திமுக) – 1,15,709 (74.7%), சீதாலட்சுமி (நாதக) – 24,151 (15.59), நோட்டா – 6,109 (3.94%), ஓட்டு வித்தியாசம் – 91,558 (திமுக முன்னிலை).

News February 8, 2025

மகத்தான வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் 

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அத்தனை பேரும் டெபாசிட் இழந்துள்ளனர். பெரியார் மண்ணில் பெரும் வெற்றி பெற்றுள்ளோம் என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

முதல்வர், துணை முதல்வர் தான் காரணம்: சந்திரகுமார்

image

ஈரோட்டில் பேசிய திமுக வேட்பாளர் சந்திரகுமார், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து திமுக சொல்லி வருகிறது. தேர்தல் வெற்றி பெற்றால் காரணம் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தான் காரணம். இந்த தேர்தல் எதிரொலி தான் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். பிரதான எதிர்கட்சி போட்டியில்லாததால், நோட்டாவுக்கு வாக்குகள் விழுந்தது.

News February 8, 2025

நாம் தமிழர் டெபாசிட் இழப்பு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி டெபாசிட் இழந்தார். 2023 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி தற்போது அதை முறியடித்த நிலையிலும் டெபாசிட்டை இழந்தது. திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றார். சீதாலட்சுமி இரண்டாம் இடம் பிடித்தார். நோட்டா 3ஆம் இடம் பிடித்தது. தேர்தலில் போட்டியிட்ட 46 பேரில் திமுக வேட்பாளரை தவிர்த்து 45 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்.

News February 8, 2025

1 லட்சம் வாக்குகளை கடந்த திமுக

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். 14 சுற்றுகள் முடிந்த நிலையில் 1 லட்ச வாக்குகளை பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 21,802 வாக்குகளை பெற்றுள்ளார். நாதக வேட்பாளை விட திமுக வேட்பாளர் 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நோட்டா 5,075 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளது.

News February 8, 2025

திமுக வெற்றி உறுதியானது

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி உறுதி செய்யப்பட்டது. 50 சதவீத வாக்குகளை திமுக வேட்பாளர் சந்திரகுமார் பெற்றதால் வெற்றியை உறுதி செய்தார்.தற்போது 11வது சுற்றில் 59 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News February 8, 2025

நாம் தமிழர் கட்சி முன்னேற்றம்

image

நாம் தமிழர் கட்சி கடந்த 2023ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. 2023 தேர்தலில் 10,827 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி தற்போது 7ஆம் சுற்று முடிவில் 10,587 வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விட நாம் தமிழர் முன்னேற்றம் கண்டுள்ளது. இதுகுறித்து மக்களே உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.

News February 8, 2025

நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் பெறுவாரா?

image

ஈரோடு தேர்தலில் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு ஓட்டுகளை பெற்றால் டெபாசிட் பெற்றுவிடலாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 1,54,657 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 25,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் பெற முடியும். எனவே நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News February 8, 2025

50,000 வாக்குகள் பெற்ற திமுக

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 50,000 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 10,897 வாக்குகள் பெற்றுள்ளது. நோட்டா 2,000 வாக்குகள் பெற்றுள்ளது. இன்று 10 வாக்கு சுற்றுகள் உள்ளது.

error: Content is protected !!