India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். அதில், சட்டப்பேரவைத் தலைவருடன் சேர்த்து திமுக உறுப்பினர்களின் பலம் 133ஆக இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் வசமிருந்த ஈரோடு கிழக்கு தொகுதியானது தற்போது திமுக வசமாகியுள்ளது. இதையடுத்து, நேற்று சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றதன் மூலம் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் பலம் 134ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் தேர்தலில் வென்றார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 2025 முடிவடைந்ததையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும் / மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா நேற்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்பு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு பங்கேற்றனர்.
ஈரோடு, அரச்சலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அஞ்சு ராம் பாளையம் பகுதியில் ஒரு காட்டுப் பகுதியில் இன்று பழனிச்சாமி என்ற 65 வயதுடைய வாட்ச்மேன் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் எதற்காக செய்தார்கள் என்பது பற்றி அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (பிப்.10) தேசிய குடற்புழு நீக்க தினம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் நாளை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 16 வேட்பாளா்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா். முனியப்பன்-85, பிரபாகரன்-78, முத்தையா-78, ராமசாமி-26, சாமிநாதன்-92, கிருஷ்ணமூா்த்தி-92, சங்கா்குமாா்-68, காா்த்தி-64, பரமேஸ்வரன்-64, ராஜமாணிக்கம்-61, செங்குட்டுவன்-55, லோகேஷ் சேகா்-50, திருமலை-42, சுப்பிரமணியன்-37, ராஜசேகரன்-30, முருகன்-24.
அந்தியூரில் பழமைவாய்ந்த மலைக்கருப்பசாமி கோயில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைதியான சூழலில் அமர்ந்திருக்கும், மலைக்கருப்பசாமி, ஒரு சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார். அனைத்துவித தடைகளையும் போக்கும் வல்லமை கொண்ட கருப்பசாமியை, வீரப்பன் அவ்வப்போது வந்து வணங்கி செல்வாராம். இங்கு பூஜை முடிந்து வழங்கப்படும் மூலிலைச்சாறை பெற மக்கள் அலைமோதுவார்களாம். இது பலவகை வியாதிகளை தீர்க்கும் என நம்பப்படுகிறது.
பெருந்துறை, சிவகங்கை மாவட்டம் சிங்கம்பிடாரியை சேர்ந்தவர் அபி ரஹ்மான், 32; கள்ளியம்புதூர், காமாட்சியம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்தார். இவர் மீது பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு வழக்கு உள்ளது. பவானியில் தாயார் வீட்டில் தங்கி, மது குடித்து சுற்றி திரிந்தார். நேற்று முன்தினம் தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், பெருந்துறை போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு, 2024-25 நிதியாண்டில் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம், இதர வரிகளை உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். இதற்காக வரி வசூல் மையங்கள், சனிக்கிழமை உட்பட அனைத்து வேலை நாட்களிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகின்றன.
ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி நடவு மானியம் 10,000/- கூடுதல் மகசூலுக்கு சிறப்பு மானியம், கட்டை கரும்பு பராமரிப்புக்கு 5,000/- வாழைக்கு மாற்றாக கரும்பு நடவு 10,000/- என பல்வேறு மானியத்திட்டங்களை அறிவித்துள்ளது, இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.