Erode

News February 20, 2025

மக்களுக்கு நன்றி கூற வரும் எம்.பி 

image

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், இந்திய கூட்டணியின் சார்பாக நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வரும் 22ஆம் தேதி வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்லி, குறைகளை கேட்க வருகிறார். மேலும், காங்கேயம் தொகுதிக்குட்பட்ட சென்னிமலை ஒன்றியத்தில் காலை 8 மணி முதல் இரவு வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

News February 20, 2025

தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை

image

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 13வது செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். ஸ்டீல் பேப்ரிக்கேஷன் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் முருகானந்தம் வரவு- செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

News February 20, 2025

BREAKING: சீமான் இன்று ஆஜராகவில்லை

image

ஈரோடு, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் இன்று (பிப்.20) ஆஜராகவில்லை. ஈரோடு இடைத்தேர்தலின் போது, பெரியார் குறித்த அவதூறு கருத்து தெரிவித்தற்காக சீமான் நேரில் ஆஜராகும் படி போலீசார் சம்மன் அனுப்பிருந்தனர். ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. அவருக்கு பதில் அவரது வழக்கறிஞர் நன்மாறன் ஆஜராகி காவல் ஆய்வாளரிடம் விளக்கம் அளித்தார். 

News February 20, 2025

மஞ்சள் என்றாலே “நம்ம ஈரோடு தான்”

image

ஈரோடு “மஞ்சள் நகரம்” எனப் புகழ்பெற்றது. சின்ன நாடன், பெரும் நாடன் போன்ற அரியவகை மஞ்சள் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. காவேரி, பவானி நதிப் பாசனத்தால் மஞ்சள் சாகுபடி செழித்தது. 2019ல் புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சள், உலகளவில் தரம் மற்றும் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது.

News February 20, 2025

பண்ணாரியம்மன் கதை தெரியுமா மக்களே?

image

அக்காலத்தில் துணி துவைப்பதற்காக ஒரு தம்பதியினர் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். அப்பெண் கர்பிணியாக இருந்ததால், பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதில் 2 பெண் குழந்தைகள் பிறந்ததில், ஒரு குழந்தையை தூக்க முடியாமல் அங்கே விட்டு வந்துள்ளனர். ஊர் மக்கள், அக்குழந்தையை தூக்க சென்றனர். ஆனால் யாராலும் தூக்க முடியவில்லை. பின் இக்குழந்தையே தெய்வமாக எழுந்தருளியதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு கதை உண்டு.

News February 20, 2025

தமிழகத்தின் ‘சூரத் ஈரோடு’

image

தமிழ்நாட்டின் நெசவுத் தொழிலின் மையமாக விளங்குகிறது ஈரோடு. பருத்தி நூல், துணி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்நகரம், “நெசவுப் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படுகிறது. கைத்தறி முதல் இயந்திர நெசவு வரை, ஈரோடு நெசவுத் தொழிலின் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்றும் பாரம்பரிய நெசவுகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் இணைந்து இத்தொழில் வளர்ந்து வருகிறது .

News February 20, 2025

மன அமைதி தரும் திண்டல் முருகன்

image

ஈரோட்டில் அமைந்துள்ள பழமையான திண்டல் முருகன் கோவில் சோழர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் புகழப்படும் 108 முருகன் கோவில்களில் இதுவும் ஒன்று. வேலாயுதசாமி எனும் முருகன் மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தைப்பூசம், கந்த சஷ்டி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன, மன அமைதி பெற பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசித்துவிட்டு செல்கின்றனர்

News February 20, 2025

புறவழி சாலை திட்ட பணிகள் விரைவில் துவங்க வாய்ப்பு

image

கோவையில்- சத்தியமங்கலம் புறவழி சாலை திட்டத்திற்கான பணிகளை விரைவில் துவங்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது என்கிற அறிவிப்பு பொது தளங்களில் ஒரு சில நாட்களில் வெளியாகும் எனவும். இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக நில உரிமையாளர்களிடம் விரைவில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

News February 20, 2025

ஒன் ஸ்டாப் சென்டரில் பணி: உடனே விண்ணப்பிக்கவும் 

image

ஈரோடு மாவட்டத்தில் ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள 4 பணியிடங்களுக்கு பிப்.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்குப்பணியாளர்கள் 2 போ், பாதுகாவலா்- 1, பல்நோக்கு பணியாளர்- 1 ஆகியப் பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனர் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 20, 2025

108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு 102 சேவையில் சுகாதார ஆலோசனை அதிகாரியாகவும், 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராகவும் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 22ம் தேதி காலை 10 முதல் மதியம் 2 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனை டிபி ஹாலில் நடக்கிறது. அடிப்படை தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம் முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 73388-94971, 8925941108 எண்களை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!