India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் +1 பொதுத்தேர்வு நாளை 5 ம் தேதி தொடங்கி வருகிற 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் 23,258 மாணவ மாணவிகளும், தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத 108 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் தற்போது இருந்து வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 32.19 செல்சியஸாக பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 24.53 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. எனவே கோடை வெப்ப அலைகளால் வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானங்களைத் தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் மார்ச் 15 காலை 8.00 மணி முதல் மாலை 4 மணி வரை, ரங்கம்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேபட்ட நிறுவனங்களில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ள. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி,டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் என அனைவரும் பங்கு பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
ஈரோடு, குமலன்குட்டை, செல்லபண்ணகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(52). இவரது மனைவி சித்ரா (43). பெருந்துறையில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமண விழாவுக்கு 2ம் தேதி சென்று கொண்டிருந்துள்ளனா். அப்போது தொடர்ந்து ஹெல்மட் அணிந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் சித்ராவின் 5 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
ஈரோடு, ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதன்படி, கடந்த இரு மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக, 250 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து, இவர்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஈரோட்டில் மட்டும் 77 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே <
ஈரோடு,தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில், 108 தேர்வு மையங்களில் 22,424 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இன்று மொழி பாடத்தேர்வு நடக்கிறது. ஈரோடு, கோபி, அந்தியூர், தாளவாடி ஆகிய நான்கு இடங்களில் தேர்வு வினாத்தாள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 108 தேர்வு மையங்களுக்கும் தலா ஒருவர் என, 108 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள்.
ஈரோடு டவுன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கஸ்தூரி ரங்கநாதர் திருக்கோயில், 7 கலசங்களை கொண்டு பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் பெருமாளின் காவலர்களாக ஜெயன் ,விஜயன் இருவரும் கருவறைக்கு உள்ளேயே தாழ்பணிந்து நிற்பதை காணலாம்.இந்த கோயிலில் வழிபாடு செய்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும், கோபம் குணம் கொண்டவர்களின் கோபத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.
ஈரோட்டில், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சீமானுக்கு சம்மன் வழங்க 3வது நாளாக ஈரோடு போலீசார் நீலாங்கரையில் முகாமிட்டுள்ளனர். ஈரோடு தொகுதி தேர்தல் பரப்புரையில், “வெடிகுண்டு வீசுவேன் என வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் தரமான பருத்தி விதை விற்பனை செய்வதை உறுதி செய்ய,156 பருத்தி விதை மாதிரிகள் முளைப்பு திறன் பரிசோதனைக்கும்,97 மாதிரிகள் இன தூய்மை மற்றும் 246 விதை மாதிரிகள், பி.டி.மரபணு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது.தரமற்ற விதைகளை விற்பனை செய்பவர்கள் மீது இன்றியமையா பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என்று ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி எச்சரித்துள்ளர்
Sorry, no posts matched your criteria.