Erode

News March 9, 2025

“நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு”

image

ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 10,552 பேருக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின் செய்தியாளர்கள் கேள்விக்கு, நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஏற்பாடு செய்வார். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆடுகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு கிடைக்கும் என்றார். 

News March 9, 2025

ஈரோடுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஈரோடு, காஞ்சி, சிவகங்கை, தேனி, கரூர், நாகை, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும் என்றார். இது ஈரோடு பெண்கள் மத்தியில் வரவேற்ப்பு பெற்றுள்ளது. ( Share பண்ணுங்க)

News March 8, 2025

காட்டுபன்றி குறுக்கே வந்தால் இளைஞர் படுகாயம்

image

கர்நாடக மாநிலம் பந்தேகவுடநல்லி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு. இவர் இரவு தாளவாடி பனக்கள்ளி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் பந்தேகவுடநல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எரகனள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது காட்டு பன்றி குறுக்கே வாகனத்தில் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து சந்துரு பலத்த காயம் அடைந்தார்.

News March 8, 2025

கோபி அருகே கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

ஈரோடு: கோபி அருகே தாசம்பாளையத்தில் சாலையோரம் நின்ற பேருந்து மீது கார் மோதியதில், காரை ஒட்டிச் சென்ற கண்ணுச்சாமி (58) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தனது மாமனாரை வீட்டில் விட்டுவிட்டு பொலவக்காளிபாளையம் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட காரை, ஜேசிபி கொண்டு வெளியே எடுத்து உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டது.

News March 8, 2025

WOMEN’S DAY SPECIAL: ஈரோடு ஆராயம்மாள்

image

இன்று உலக மகளிர் தின(மார்ச்.8). சென்னிமலையை சேர்ந்த ஆராயம்மாள் 74 வயதிலும் ஓயாத உழைக்கும் பெண்மணி. ஆராயம்மாள். 38 ஆண்டுகளாக கைத்தறிக்கு நூல் நோற்கும் பணியில் ஆராயாம்மாள் ஈடுபட்டு வருகிறார். உழைப்பு ஒன்று உயர்வு தரும் என்றவர் உடல் ஒத்துழைக்கும் வரை உழைப்பேன் என உற்சாகமாகச் சொல்கிறார் ஆராயாம்மாள். பெண்மையை போற்றுவோம்.  இந்த WOMEN’S DAY-க்கு  சிங்கப்பெண் இவர் தான். (Share பண்ணுங்க)

News March 8, 2025

WOMEN’S DAY SPECIAL: ஈரோடு ஆராயம்மாள்

image

இன்று உலக மகளிர் தின(மார்ச்.8). சென்னிமலையை சேர்ந்த ஆராயம்மாள் 74 வயதிலும் ஓயாத உழைக்கும் பெண்மணி. ஆராயம்மாள். 38 ஆண்டுகளாக கைத்தறிக்கு நூல் நோற்கும் பணியில் ஆராயாம்மாள் ஈடுபட்டு வருகிறார். உழைப்பு ஒன்று உயர்வு தரும் என்றவர் உடல் ஒத்துழைக்கும் வரை உழைப்பேன் என உற்சாகமாகச் சொல்கிறார் ஆராயாம்மாள். பெண்மையை போற்றுவோம்.  இந்த WOMEN’S DAY-க்கு  சிங்கப்பெண் இவர் தான். (Share பண்ணுங்க)

News March 8, 2025

ஈரோடு: ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

ஈரோட்டில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். Share பண்ணுங்க

News March 8, 2025

10 நாள்கள் இலவச பயிற்சி

image

ஈரோடு அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி சாலையில் வாசவி கல்லூரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மசாலா பொடிகள், அப்பளம், ஊறுகாய் தயாரிக்க இலவச பயிற்சி வரும் 10ம் தேதி முதல் துவங்கி 20ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. விவரங்களுக்கு 0424-2400338, 87783 23213, 72006 50604 என்ற எண்ணை அழைக்கவும். (Share பண்ணுங்க)

News March 8, 2025

ஈரோட்டில் கடும் வெயில்

image

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. ஈரோட்டில் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக வெயில் பதிவான மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தை பிடித்து இருப்பது, ஈரோடு மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மக்களே வெயிலில் செல்லும் போது குடை, தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லுங்கள். (Share பண்ணுங்க)

News March 7, 2025

தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஈரோடு

image

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. ஈரோட்டில் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக வெயில் பதிவான மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தை பிடித்து இருப்பது, ஈரோடு மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

error: Content is protected !!