India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ந்தனர். இந்திரா நகர், வளையக்காரவீதி போன்ற இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஈரோடு வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண் அடுக்குத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அரசு துறை சார்ந்த அனைத்து மானிய திட்டங்கள், பிஎம் கிஷான் வருடம் 6000 பெரும் திட்டம் இதன் மூலம் மட்டுமே செயல் படுத்தப்படும். எனவே அருகே உள்ள பொது சேவை மையங்களை CSC அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈரோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கவுந்தப்பாடி அருகே உள்ள பாப்பாங்காட்டூரில் உள்ள கார்த்தி என்பவரது தோட்டத்தில், நேற்று ஒன்பது ஆடுகளைக் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து கொன்றது. பாதிப்பை தடுக்க வலியுறுத்தி நேற்று மக்கள் ஆடுகளுடன் சாலைமறியல் செய்தனர். நிகழ்விடத்திற்கு வந்த பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 15 ம் தேதி காலை 8.00 மணி முதல் மாலை 4 மணி வரை, ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேபட்ட நிறுவனங்களில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ள. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி,டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் என அனைவரும் பங்கு பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கூத்தம்பட்டி ஜேஜே நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி மாரியம்மாள் 52. கோவிந்தசாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த பிறகு, மாரியம்மாள் கவலையுடன் காணப்பட்டார். இந்நிலையில் துயரம் தாங்காமல், மாரியம்மாள் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். அரச்சலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு திண்டல் மலையில் புகழ்பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாட பெற்ற 178 தலங்களில் இக்கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் பிரதி வார செவ்வாய் அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துக்கோண்டு முருகனை வழிப்பட்டால் திருமணத்தடை, குழந்தையின்மை, செவ்வாய் தோஷம் தொழில் பிரச்சனை என தீராத வினைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வின் சகலுமும் கை கூடி அடுத்த நிலைக்கு செல்லலாமென கூறப்படுகிறது.
ஈரோடு பேருந்து நிலையத்தில், மார்ச் 15,16 ஆகிய இரு தேதிகளில் இயற்கை சந்தை நடைபெறுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம், மகளிர் இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கேட்டு கொண்டு உள்ளார்.
ஈரோடு, அஞ்சல் துறை மூலம் சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது. தற்போது தொழில் நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி, படிவம் இன்றி எளிமையாக பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆதார் அடிப்படையிலான அங்கீகார செயல்முறை (e-KYC) பரிவர்த்தனை திட்டம் அறிமுகமாகி உள்ளது. இவ்வசதி, ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே பெருந்துறை, கோபி, சத்தி, கொடுமுடி, சிவகிரி, நம்பியூர், சத்தியமங்கலம், கடம்பூர், பவானி பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வழித்தடத்தில் மினிபஸ்கள் இயக்கப்பட உள்ளது. புதிய வழித்தடத்துக்கு அனுமதி கோரி விரும்புவோர் அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அணுகி உரிய ஆவணங்களை சமர்பித்து மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து நிலுவை, நடப்பாண்டு வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வசூலிக்கப்படுகிறது. அனைத்து பொதுமக்களும் வரும் 31க்குள் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிம கட்டணத்தை செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை, தண்ணீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. Share பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.