India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (26). இவருக்கும் 27 வயது இளம்பெண் இடையே பழக்கம் இருந்துள்ளது. சமீபகாலமாக அந்தப் பெண் மாதேஷைத் தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த அவர், நேற்று அப்பெண்ணின் கழுத்தில் கத்தியால் கீறியுள்ளார். இதில் காயமடைந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர்.

சென்னிமலை பசுவபட்டி ஊராட்சி வெங்கமேடு கிராம மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகக் கூறி தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளனர். “எங்கள் ஊருக்குள் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம்; இனி அரசியல்வாதிகளை நம்பி ஏமாற மாட்டோம்” என அதில் குறிப்பிட்டுள்ளனர். பல வருட கோரிக்கைகள் நிறைவேறாததால் மக்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கே.ஏ. செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனை, அதிமுக-வினர் அளித்த ஆட்சேபனையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், பிரமாணப் பத்திரத்தில் இருந்த பிழைகள் குறித்து அவர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்ததையடுத்து, அவரது வேட்புமனு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ஈரோடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0424-2431020 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்பட்டார். செங்கோட்டையன் கோபியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று அவரது வேட்புமனுவில் பிழை இருப்பதாக கூறி தற்போது பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு மனு ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் அலுவலகர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <

ஈரோடு மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

தமிழ்நாட்டில் இன்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் (104 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.