Erode

News September 25, 2024

வேளாண் குறைதீர் கூட்டம்: ஆட்சியர்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகிக்க உள்ளார். எனவே இக்கூட்டத்தில், விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள், பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

வேலை வாய்ப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பயிற்சி மையத்துடன் இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ஆம் தேதி கோவையில் உள்ள சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் நடக்கவுள்ளது. இதில் ஈரோட்டைச் சேர்ந்த 8, 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள், டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் கல்விச் சன்றிதழ்களுடன் பங்கேற்றலாம் என தெரிவித்துள்ளனர்.

News September 25, 2024

பர்கூர் போலீசார் சோதனையில் சிக்கிய 9 லட்சம் மதிப்புள்ள குட்கா

image

பர்கூர் போலீசாரின் வாகன சோதனையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பறிதல் செய்தனர். அந்தியூர் அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதிக்கு, சர்க்கரை லோடின் அடியில் வைத்து கொண்டு வரப்பட்ட 9 லட்சத்தி 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, சக்தி கரட்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், ஸ்ரீநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

News September 24, 2024

ஈரோட்டில் செல்போன் பறிப்பு: 3பேர் கைது

image

ஈரோட்டில் செல்போன் பேசியபடி சாலையில் நடந்து சென்ற தடகள வீராங்கனை செல்வியை பைக்கில் பின்தொடர்ந்து சென்ற நபர்கள் செல்போனை பறித்துச் சென்றனர். இந்நிலையில் இன்று சிசிடிவி காட்சிகள் உதவியுடன் ஒரு சிறார் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போனை மீட்டு செல்வியிடம் ஒப்படைத்தனர்.

News September 24, 2024

நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் வேலைவாய்ப்பு

image

ஈரோட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 10 சமுதாய அமைப்பாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணபதாரர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதேனும் 1 டிகிரி (எம்எஸ் ஆபீஸ்) திறன் பெற்றவராக இருக்க வேண்டும். விபரங்களுக்கு 93635-12123 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

மாவட்ட விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

image

ஈரோடு மற்றும் சேலம் மாவட்டதிற்கு உட்பட்ட அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, டி. என்.பாளையம், கொளத்தூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் எம்பி சுப்பராயன் தலைமை வகித்தார். இதில் வெங்கடாச்சலம் எம்எல்ஏ.,முன்னாள் எம்.பி கோவிந்தராஜ் உட்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News September 24, 2024

PF குறித்த குறைதீர் கூட்டம்

image

பெருந்துறை அடுத்த ஈங்கூர் அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி, மாவட்ட அளவிலான வருங்கால வைப்பு நிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை உறுப்பினர்கள் (ம) தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

இப்பகுதியில் மின்தடை அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மின்பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சிப்காட் துணை மின்நிலையம், கங்காபுரம் துணை மின்நிலையம், சூரியம்பாளையம் துணை மின்நிலையம், பெரும்பள்ளம் துணை மின்நிலையம், வரதம்பாளையம் துணை மின்நிலையம், மாக்கினாங்கோம்பை துணை மின்நிலையம், பெரிய கொடிவேரி துணை மின்நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 23, 2024

குவிண்டால் மஞ்சள் ரூ.12,929 வரை ஏலம்

image

ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் இன்று நடைபெற்றது. இதற்கு 32 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் 2 மூட்டைகள் ஏலம் போனது. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் (100 கிலோ) ஒன்று ரூ.11 ஆயிரத்து 099 முதல் ரூ.12 ஆயிரத்து 929 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.9 ஆயிரத்து 788 முதல் ரூ.12 ஆயிரத்து 399 வரைக்கும் விற்பனை ஆனது.

News September 23, 2024

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.23) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (ம) காவல் துறை நடவடிக்கை போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்று கொண்டார்.