India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 1330 திருக்குறள்கள் ஒப்புவிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டத்தில் ரூ.15000 வழங்கப்படுகிறது. இதற்கு ஈரோடு மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளி மூலம் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து ஆக.31-க்குள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு அரசியலில் முக்கிய தலைவரும், தமாகா பொதுச்செயலாளருமான எம்.யுவராஜா, முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து நேற்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் முதல்வர் 3 வெளிநாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க சென்றும் அதில் பாதிகூட செயல்பாட்டுக்கு வரவில்லை என விமர்சித்தார். முதல்வர் முதலீடு ஈர்க்கப்போகிறாரா; செய்யப்போகிறாரா? எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்? என கேள்விக்கணைகளை தொடுத்தார்.
ஈரோடு மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், ஆகஸ்ட் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே ஈரோடு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
சென்னிமலையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (65). இவர் நேற்று பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் இன்று சுந்தரமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோடு சூரம்பட்டி சங்கு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (33), சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் மாடியில் ஏறி உள்ளார். அப்பொழுது கால் தவறி கீழே விழுந்த அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 77வது தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான, தமிழக அணி தேர்வு போட்டி நேற்று சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் மையத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி மாணவி கனிகா கலந்து கொண்டு தமிழக அணியில் தேர்வானார். இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளார்.
ஈரோட்டில் உள்ள 18 வயது – 45 வயது வரையுள்ள பெண்களுக்கு, கனரா வங்கியின் மூலம் இலவசமாக ஆரி எம்பிராய்டரிபயிற்சி அடுத்த மாதம் 2.9.2024 தேதியில் இருந்து 9.10.2024 தேதி வரை 30 நாட்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி ஈரோடு கொல்லம்பாளையம் ஆசிரமம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கனரா வங்கி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்புக்கு – 0424 200338
ஈரோட்டில் கிரெடாய் சார்பில் வீடுகள் மனைகள் அடுக்குமாடி குடியிருப்புகள் கண்காட்சி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பார்வையாளர்களாக பங்கேற்ற ஒரு குடும்பத்திற்கு குலுக்கல் முறையில் 4 கிராம் தங்க நாணயம் பரிசாக நேற்று வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகை சுஜிதா பங்கேற்று வெற்றிபெற்ற குடும்பத்திற்கு 4 கிராம் தங்கத்தை பரிசாக வழங்கினார்.
ஈரோடு ஜேசிஐ கிரீன் சிட்டி என்ற அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த வேளாண்மை துறைக்கான விருதை இன்று பெற்றது. இதனை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, விருதினை பெற்றவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
ஈரோடு: பர்கூர் தாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் லாரி டிரைவரான மாதேவன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு லாரி வாங்கி ஓட்டி வந்ததாகவும், அதில் கடன் ஏற்பட்டு லாரியை விற்ற நிலையில், கடன் தொந்தரவு தாங்க முடியாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கட்டி சமுத்திரம் ஏரி பகுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.