India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டு கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு புத்தொழில் திட்டத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியில் உருவாக ‘தடம்’ பெட்டகத்தை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பரிசளித்தார். இந்த தடம் பெட்டகத்தில் பவானி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய ஜமுக்காளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு திருணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. இவர் தனது தாய் அங்கம்மாளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி அங்கம்மாள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆனந்தனின் மனைவி புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், ஈஎம்ஐ கட்ட பணம் தராததால் ஆனந்தன் தாயை அடித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
ஈரோடு காவிரி கரையோர பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி செப். 14ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலில் நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமல் காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் பனை விதைகள் நடப்படும் என தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால், ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பவானி வரை இயக்கப்படும் அரசு டவுன் பேருந்தின் ஓட்டையின் வழியாக மழைநீர் பேருந்துக்குள் வந்தது. இதனால், பயணிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
தனியார் நிறுவனம் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோடு சாலையில் டாப் ஷோரூம் அருகில் பெண்கள் தொழில் முனைவோர் நிறுவனங்கள் பங்கேற்ற 72 அரங்குடன் கூடிய விற்பனை நிலையங்கள் கண்காட்சி இசைக்கச்சேரி ஆகியவற்றைகள் 2 நாட்கள் நடைபெற உள்ளன. இவ்விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிகே சரஸ்வதி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்று விழாவினை துவக்கி வைத்தார். இதில் விஜய் டிவி புகழ் கெமி உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை முதல் பெங்களூர் வரை ரயில் சேவை புதிய வழித்தட வந்தே பாரத் ரயில் சேவையை பாரத பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக இன்று துவக்கி வைத்தார். இந்த ரயிலை வரவிருக்கும் விதமாக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி பச்சைக்கொடி அசைத்து மலர் தூவி வரவேற்றார். அப்போது அவருடன் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பாஜகவினர் என பலரும் உடன் இருந்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த பிரசித்திப் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிச்சாமி குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்களின் பிரச்னைகளை களைந்து அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சி, சமூக பாதுகாப்புடன் வாழ, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, நலத்திட்ட உதவிகளை பெறலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஆணையர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், அதிகரித்து வரும் கேன்சர் பற்றி கவலை தெரிவித்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலிதீன் கவர் பிளாஸ்டிக் டம்ளர் போன்றவற்றால் அதிகம் புற்றுநோய் வருவதாக கவலை தெரிவித்தார், இதை மக்கள் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்க உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/5tTFr7CqZFNuwZ596 என்ற லிங்க் மூலம் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.