India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் ஒரு இடத்தில், அக்டோபர் 19ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட குறைதீர் நாள் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் புதிய ரேசர் கார்டு பெற மனுக்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், அலைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம், வேளாளர் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 19/10/2024 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்புமுதல் பட்ட படிப்பு வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.
ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அனைத்து தொழிற்சாலைகளும் 2025ஆம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதற்கு https://dish.tn.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் அக்டோபர் 31-பின் விண்ணப்பித்தால் தாமத கட்டணம் செலுத்த வேண்டும் என ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (15.10.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது TN Fact Check தற்போது சமூக வலைதளங்களில் பரவும் செய்தி எடிட் செய்து வெளியாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரோட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பவானி ஆற்றில் எந்நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (15.10.2024) (ம) நாளை (16.10.2024) இரு தினங்களுக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077, 0424-2260211 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். மேலும் ‘தமிழ்நாடு அலர்ட்’ செயலி மூலம் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் மழை பெய்து வருகிறது. இதில் ஈரோடு நகர், திண்டல், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளைம், செங்கோடம்பள்ளம் என பரவலாக மழை பெய்தது. மாலை தொடங்கிய மழை நின்ற போதும் தொடர்த்து தூரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் குளிர்ந்த சீதோஷன சூழல் உருவானது.
மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான 10வது சப்-ஜூனியர் மாணவ, மாணவியர்களுக்கான மென் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது. மாணவர் பிரிவில் 15 அணிகளும் மாணவியர் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன. ஆடவர் பிரிவில் சேலம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் திருச்சியை வென்று ராணிப்பேட்டை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
சத்தி-கோபி சாலை, மீன்கடை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்னி வேனில் வந்துள்ளனர். வேனை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்திவிட்டு டாக்டரை பார்க்க உள்ளே சென்றுவிட்டனர். டிரைவர் வேன் முன் போன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வேனிலிருந்து புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக் கண்ட டிரைவர் சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அணைத்தனர்.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொமரயானூர்காலனி வளைவில் 7 பேரை ஏற்றிக்கொண்டு வந்த 4 சக்கர மினி ஆட்டோ மீது எதிரே வந்த கார் மோதியதில் பரணிதரன், சாந்தி, விஜயன், தங்கா, விஜயன், நிர்மலா தேவி, மோகன்ராஜ், தினேஷ், நாகம்மாள், ஆனந்த் ஆகியோர் காயமடைந்தனர். 7 பேர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர் சேதம் எதுவும் இல்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.