India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகளில் 1,111 வாக்கு சாவடிகள் பதட்டமானவை . இந்த வாக்குச்சாவடிகள் வெப் கேமரா, விடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானிசாகா் ஆகிய தொகுதிகளுக்கு கூடுதலாக கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், அனைவரும் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள், எஸ்ஏஇ இந்தியா சதரன் பிரிவு ஆல் நடத்தப்பட்ட தேசிய அளவிலான மின் இருசக்கர வாகன வடிவமைப்புப் போட்டியில் கலந்துகொண்டனர். இதில், இக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய புதிய பேட்டரி மூலம் இயங்கும் மின் இருசக்கர வாகனத்திற்கு தேசிய அளவில் மூன்றாவது பரிசு கிடைத்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 48.94 அடியாக குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி பவானிசாகர் அணை நீர்மட்டம் 48.20 அடியாக குறைந்து இருந்தது. அதன் பின்னர் தற்போது தான் 48 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அருகேயுள்ள அக்கரை தடப்பள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (58), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதிமணி (48) .கணவன் மனைவி இருவரும் கள்ளிப்பட்டி அருகே உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று மொபட்டில் வீடு திருப்பிக் கொண்டிருந்தனர். டி.என்.பாளையம் தனியார் கல்லூரி அருகே கார் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அறச்சலூர் அருகில் உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள சொர்ணபைரவர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் மக்கள் கலந்து கொண்டு காலபைரவரின் ஆசியை பெற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் நகர உட்கோட்ட பகுதியில் வருகின்ற மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் பாதுகாப்புக்காக வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினரின் அணி வகுப்பு இன்று நடைபெற்றது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஜகவர் தலைமையில் அணிவிப்பு நடைபெற்றது.
ஈரோடு எஸ்கேசி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று மாணவ மாணவியர்களிடம் மக்களவைத் தேர்தலுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், மாணவ, மாணவிகளிடம் உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியர் கலந்து கொண்டனர்
திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தம் தற்காலிக தேர்தல் கட்சி அலுவலகத்தை அனுமதி பெற்ற தேதிக்கு முன்பாக திறந்து வைத்ததாக தேர்தல் அதிகாரி பூபாலன் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர் முருகானந்தம் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோர் மீது அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Sorry, no posts matched your criteria.