India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அந்தியூரில் பழமைவாய்ந்த மலைக்கருப்பசாமி கோயில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைதியான சூழலில் அமர்ந்திருக்கும், மலைக்கருப்பசாமி, ஒரு சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார். அனைத்துவித தடைகளையும் போக்கும் வல்லமை கொண்ட கருப்பசாமியை, வீரப்பன் அவ்வப்போது வந்து வணங்கி செல்வாராம். இங்கு பூஜை முடிந்து வழங்கப்படும் மூலிலைச்சாறை பெற மக்கள் அலைமோதுவார்களாம். இது பலவகை வியாதிகளை தீர்க்கும் என நம்பப்படுகிறது.

ஈரோட்டில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை தொடர்பான அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

அந்தியூர் அருகே காந்திநகரைச் சேர்ந்த விவசாயி வெங்கடசாமிக்குச் சொந்தமான ஏழு மாடுகள், செடிகளுக்குப் பாய்ச்ச வைத்திருந்த யூரியா கலந்த தண்ணீரைக் குடித்ததால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது. கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வரும் நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயக் குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது.

ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே மாத்தூரைச் சேர்ந்த பழனிச்சாமி (32), தனியார் ஆலையில் இயந்திர ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து வந்தார். ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக மனமுடைந்த அவர், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

ஈரோட்டில் நாளை (ஜன.29) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. கவுந்தப்பாடி, சந்திராபுரம், பெருமாபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், பாண்டியம்பாளையம், எல்லீஸ்பேட்டை, குஞ்சசமடை,சிங்காநல்லூர், பெருந்தலையூர், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, சித்தன்குட்டை, மல்லியம்பட்டி, என்.மேட்டுப்பாளையம், குறிச்சி, மாமரத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் நாளை காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஆகும்.

ஈரோட்டில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் ஈரோடு வளையக்கார வீதி மணிவேல் (21), ஈரோடு கொல்லம் பாளையம் கட்டபொம்மன் வீதி ராஜிவ்(19), வெண்டிபாளையம் கோணவாய்க்கால் நேதாஜி வீதி கவுதம் (21), ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகமது கைப்(21) என நான்கு பேரை கைது செய்து, 3,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <

ஈரோட்டில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.