India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் முக்கிய இடங்கள், சாலைகளில் வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கையும் சற்றே பாதிக்கப்பட்டது.
தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, 8 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை புதிய திட்டமான, கலைஞர் கடன் உதவி திட்டத்தில் நடைமுறை மற்றும் மூலதன கடன் பெறலாம். கூடுதல் விவரித்துக்கு தாய்கோ வங்கி, மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஈரோடு ஈ.வி.என்.ரோடு ஸ்டோனிபாலம் அருகில் பட்டத்தரசி அம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் திருடு போயுள்ளது. இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 2 கிராம் தங்க நகை திருடு போய் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு: புளியம்பட்டி அருகே நேற்று அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தின் பின் சீட்டில் பயணம் செய்த நதிஷ் என்ற கல்லூரி மாணவர், லாரியின் மோதலால் பேருந்தின் பக்கவாட்டு கம்பி உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் விடுமுறை நாளான நேற்று கல்லூரியில் இருந்து ஊருக்குத் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கொடுமுடி பஸ் நிலையத்தில் இருந்து மகுடேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இந்த கேட் நேற்று காலை 8 மணிக்கு மூடப்பட்டது. வருகிற 22-ம் தேதி மாலை 6 மணி வரை கேட் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்பட்டிருக்கும். அதுவரை மகுடேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாற்று பாதையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரயில்வே துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் போன்ற பலகார உணவு பொருட்கள் விற்பனை தொடங்கியுள்ளது. எனவே நுகர்வோர் உணவு பொருட்களின் தரம் மற்றும் உணவு பொருட்களில் ரசாயன பொருட்கள் கலப்பு உள்ளிட்ட புகார்களுக்கு 94440-42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கு உதவித்தொகை பெற கால அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை ஒட்டி தீபாவளி பாப் அப் மற்றும் பிரைட் ஸ்பார்க் அகாடமி இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான ஓவிய போட்டி மற்றும் வண்ணம் தீட்டும் போட்டி நாளை மாலை ஈரோடு ஹோட்டல் மெரினாவில் நடைபெறுகிறது. 5 வயது முதல் 10 வயது குழந்தைகள் கலந்து கொள்ளலாம், இதில் கலந்து கொள்ளும் குழந்தைகள் இன்று மாலைக்குள் பதிவு செய்து கொள்ளவும், மேலும் தொடர்புக்கு 9597663386 என்ற எண்ணில் அழைத்து பதிவு செய்து கொள்ளலாம்.
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட அறிக்கை: தீபாவளியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது. வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளையே உற்பத்தி செய்து விற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். தீபாவளி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு, 7 முதல், 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
குழந்தை பிறந்து பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 2009ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய வரும் டிசம்பர் 31 கடைசி தேதியாகும். எனவே கோபி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளலாம் என கோபி நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.