Erode

News December 6, 2024

அந்தியூர்: காரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

image

ஈரோடு, அந்தியூர், வெள்ளி திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் இரு தினங்களுக்கு முன்பு, ஈரோட்டில் சமையல் வேலையை முடித்துவிட்டு, அந்தியூருக்கு இரவு வாடகை காரில் வந்துள்ளார். வரும் வழியில் காரை நிறுத்திய ஓட்டுநர் பிரகாஷ், மற்றும் அலாவுதீன் ஆகியோர், செல்லம்மாளுக்கு, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து செல்லம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News December 6, 2024

ஈரோடு வந்த ரயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்

image

விசாகாப்பட்டினம் – கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து ஈரோடு வந்தது. வரும் வழியில் பொது பெட்டியில் ஈரோடு ரயில்வே போலீசார், சோதனை நடத்தினர். அப்போது யாரும் உரிமை கோராமல் இருந்த 2 பைகளை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிந்தது. மொத்தம் 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

News December 6, 2024

ஈரோடு: வாடகை செலுத்தாத 74 கடைகளுக்கு நோட்டீஸ்

image

ஈரோடு ஜவுளி ஒருங்கிணைந்த வளாக கட்டிடத்தில், செயல்பட்டு வரும் கடைகளுக்கு, மாத வாடகையாக ரூபாய் 3,540, மாநகராட்சி மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை செலுத்தாத 74 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரி மணிஷ் உத்தரவின் பேரில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு, நோட்டீஸ் நேற்று அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாடகை பாக்கி, ரூ.26 லட்சத்து 19ஆயிரத்தி 600 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

News December 6, 2024

பாபர் மசூதி இடிப்பு தினம்: பலத்த பாதுகாப்பு 

image

பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6ஆம் தேதி நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் எஸ்.பி., கு.ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு காவிரி ரயில் பாலம், ரயில் நிலையம், மாவட்ட எல்லை பகுதி சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை (ம) கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News December 6, 2024

முதலமைச்சர் வருகை: அமைச்சர் முத்துசாமி ஆய்வு

image

ஈரோடு மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 19, 20 தேதிகளில் வருகிறார். இதற்கான விழா மேடை அமைக்க ஈரோடு சோலார் பஸ் நிலையம் பகுதியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

News December 6, 2024

நூதன ஆன்லைன் மோசடி: பொதுமக்களே உஷார்

image

ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரியான சீனிவாசன் என்பவருக்கு வந்த செல்போன் அழைப்பில், தான் சிபிஐ அதிகாரி என தெரிவித்துள்ளார். பின், ஆதார் கார்டு, சிம்கார்டு எண்ணை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதனால் நீங்கள் விரைவில் கைது செய்யவுள்ளோம் என கூறி ரூ.27 லட்சத்தை பறித்துக்கொண்டனர். இதனையடுத்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்டனர்.

News December 5, 2024

ஈரோடு: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ 99 அடியை நெருங்கும் பவானிசாகர் நீர்மட்டம் ➤ அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி பணி மும்முரம் ➤ அந்தியூர் பருவாச்சி அருகே கார் மோதி ஒருவர் உயிரிழப்பு ➤ ஈரோடு வழியாக ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் ➤ அம்மாபேட்டையில் 7 அடி மலைப்பாம்பு மீட்பு ➤ ஈரோட்டில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு ➤ ஈரோடு – சம்பல்பூர் ரயில் சேவை நீட்டிப்பு ➤ பவானியில் தீர்த்தக்குடம் எடுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

News December 5, 2024

ஈரோடு – சம்பல்பூர் ரயில் சேவை நீட்டிப்பு

image

ஈரோடு-சம்பல்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஒடிஸா மாநிலம் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமை தோறும் காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08311) மறுநாள் இரவு 10.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். மறுமார்க்கமாக ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது.

News December 5, 2024

ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு

image

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி, ஈரோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் கூடுதல் போலீஸார், ரயில் நிலையத்தின் நுழைவாயில், மற்றும் ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கின்றனர்.

News December 5, 2024

ஈரோடு வழியாக ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

image

அசாமில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது, பொது பெட்டியில் 2 பைகள் கேட்பாரற்று கிடந்தது. அந்த பைகளை பார்த்தபோது அதில் போதை பொருளான கஞ்சா இருந்தது. மர்ம நபர்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி, தமிழகத்தில் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!