Erode

News December 9, 2024

திமுகவை பார்த்து விஜய் பயப்படுகிறார் – சு.முத்துசாமி

image

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் நேற்று அளித்த பேட்டியில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக இயக்கத்தின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். அந்த கட்சியில் உள்ளவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திமுகவை பார்த்து பயப்படுவதால் நடிகர் விஜய் திமுகவுக்கு எதிரான கருத்துகளை பேசி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலிலும் திமுகவின் பலத்தை நிரூபிப்போம்” என்றார்.

News December 9, 2024

ஊக்கத்தொகை பெற திறனாய்வு தேர்வு எழுத மாணவர்களே தயாரா?

image

சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஊரக திறனாய்வு தேர்வு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்களில் வரும் 14ம் தேதி தேர்வு நடக்கிறது. சுமார் 2,700 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 8, 2024

சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ

image

ஈரோடு கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கில் சேலம் அழகாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்று, 7 வருடமாக கோவை சிறையில் உள்ளார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், சிறைச்சாலையின் பணிமனையில் பணியாற்றி வருகிறார். அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு, சூரிய சக்தியால் இயங்கும் ஆட்டோவை, வடிவமைத்தார். அதை மக்களின் பார்வைக்கு போலீஸ்சார் கொண்டுவந்தனர்.

News December 8, 2024

ஈரோட்டில் 5 ஆடுகளை  கடித்துக் கொன்ற தெருநாய்கள்

image

ஈரோடு சாஸ்திரிநகரை சேர்ந்த விவசாயியான தங்கவேலு, 5 ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள், நேற்று இரவு, தங்கவேலு வளர்த்து வரும் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து, 5 ஆடுகளை கடித்து குதறின. இதில் 5 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. காலையில் தங்கவேலு எழுந்து பார்த்தபோது, ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உரிய இழப்பீடு வழங்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News December 8, 2024

பெண்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்பு

image

ஈரோடு, கொல்லம்பாளையத்தில் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 19ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 0424-2400338, 8778323213, 72006-50604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

மரக்கன்றுகள் வழங்கிய அமைச்சர்

image

ஈரோடு, அவல்பூந்துறை அருகே கனகபுரம் – அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒளிரும் ஈரோடு மற்றும் பள்ளி தேசிய பசுமை படை சார்பில், ‘விதை சிறிது, விடை பெரிது” பசுமை திருவிழாவை முன்னிட்டு நேற்று மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

News December 7, 2024

பெருந்துறையில் கஞ்சா விற்றவர் கைது

image

பெருந்துறையை சுங்கச்சாவடி, ஆவின் பால் விற்பனை நிலையப் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில், 3.5 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முருகேசன்  என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த, ரூ.40000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News December 7, 2024

காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

image

ஆங்கில புத்தாண்டு 2025 நெருங்கி வருவதை ஒட்டி ஈரோட்டில் காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் நடந்த பணிகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு புது வித காலண்டர்கள் மவுசு அதிகரித்துள்ளது என ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்டர்கள் விரைந்து முடிக்க உள்ளதாகவும் ஜாகிர் உசேன் கூறினார்.

News December 7, 2024

பவானி தினசரி மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை

image

பவானியில் பிரசித்திபெற்ற செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெற உள்ளது. இந்நிலையில், பவானி தினசரி மார்க்கெட்டிற்கு நாளை(8.12.24) விடுமுறை அறிவித்து பவானி வட்டார தினசரி அழுகும் பொருள் & மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

image

ஈரோடு மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் 2025ல் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள், டிசம்பர் 17ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 மையங்களில் (பவானி-1,ஈரோடு-3, பெருந்துறை-1, சத்தி-1, கோபி-1) விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களை விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!