India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு தபால் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் வரும் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. தபால் சார்ந்த புகார்களை வரும் 17ஆம் தேதிக்குள் தபால் மூலம் மனுவாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். நேரிலும் கோரிக்கை மனுக்கள் வழங்கலாம் என்று ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.கோபாலன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் 13ஆம் தேதி நடக்கும் தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து 450 போலீசார் செல்கின்றனர். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் போலீசார் செல்கின்றனர். அங்கிருந்து 15ஆம் தேதி அவர்கள் ஈரோட்டுக்கு திரும்ப உள்ளனர். இதேபோல் 12 தீயணைப்பு படை வீரர்கள் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் திருவண்ணாமலைக்கு செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சிறுதானியங்களான ராகி 3,780 ஹெக்டேர், சோளம் 30 ஹெக்டேர், கம்பு 135 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. மானிய விலையில் ராகி, சோளம், கம்பு விதை உற்பத்தி மற்றும் வினியோகம் செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ.1.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செய்யப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு, கோபி அருகே உள்ள தண்ணீர்பந்தல்புதூரைச் சேர்ந்த சுபத்ரா (32) என்பருக்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பாக ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தகவல் வந்தது. இதனை நம்பி சுபத்ரா பணம் அனுப்பியுள்ளார். அதன்பின் வேலை அளித்த நபர், சமூக வலைதள பக்கத்தில் இருந்து விலகினார். இந்த புகாரில் எர்ணாகுளத்தில் பதுங்கி இருந்த உபைத் (41) என்பவரை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர் அருகே உள்ள கெட்டி சமுத்திரம் ஏரி பகுதியில், இன்று மாலை ஈரோட்டில் இருந்து கர்நாடகா மாநிலம் சென்று கொண்டிருந்த லாரி மீது, பைக் மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று கிளை மேலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி கலந்து கொண்டு பேசினார். இதில் வங்கிப் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விளக்கங்களையும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை குறித்தும் விளக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் மேலாளர் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று கிளை மேலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி கலந்து கொண்டு பேசினார். இதில் வங்கிப் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விளக்கங்களையும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை குறித்தும் விளக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் மேலாளர் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் குடும்ப தகராறில் திருமலைச்செல்வன் என்பவர் தனது மனைவி, இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அதில் 4 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருமலைச்செல்வன் தலைமறைவானார். மனைவி சுகன்யா அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் திருமலைச்செல்வன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் நேற்று அளித்த பேட்டியில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக இயக்கத்தின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். அந்த கட்சியில் உள்ளவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திமுகவை பார்த்து பயப்படுவதால் நடிகர் விஜய் திமுகவுக்கு எதிரான கருத்துகளை பேசி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலிலும் திமுகவின் பலத்தை நிரூபிப்போம்” என்றார்.
சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஊரக திறனாய்வு தேர்வு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்களில் வரும் 14ம் தேதி தேர்வு நடக்கிறது. சுமார் 2,700 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.