India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா, தலமலை கிராமத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய வளாகத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு115 பயனாளிகளுக்கு ரூ.71.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் துணை ஆட்சியர் (பயிற்சி) சிவப்பிரகாசம், தாளவாடி வட்டாட்சியர் சுப்பிரமணி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கோபி அருகே பொலவக்காளிபாளையம் – புதுக்கரைப்புதூர் சாலையில், எல்லமடை – கூகலூர் கிளை வாய்க்காலில் சைபன் பாலம் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிகவும் அழுகிய நிலையில் மற்றும் அடையாளம் தெரியாத நிலையில் எடுக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கோபி போலீசார் இறந்து போனவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் டிசம்பர் 19 மற்றும் 20ஆம் தேதி பல்வேறு பணிகளை தொடங்கி வைக்க ஈரோடு வருகை தர உள்ளார். சென்னையில் இருந்து கோவைக்கு விமான மூலம் வருகிறார். டிசம்பர் 19ஆம் தேதி தங்கம் மஹாலில் நடக்கும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். சந்திரகுமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். 20ஆம் தேதி சோலாரில் அரசு விழாவில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை.ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4,239 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 98.97 அடியாக உள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் ஊரக திறனாய்வுத் தேர்வு 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கு டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 மையங்களில், 9ஆம் வகுப்பு பயிலும் சுமார் 2,700 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை ஊக்க தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.
ஈரோடு திண்டல் முதல் ஆணைக்கல்பாளையம் வரை உள்ள ரிங்ரோடு ரூ.59.60 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்தப் புதிய விரிவுபடுத்தப்பட்ட சாலையை வரும் 20ம் தேதி ஈரோட்டுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 14ம் தேதி நடைபெறுவதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார். அதன்படி கோபி தாலுகாவில் பெருமுகை அண்ணாநகரில் உள்ள ரேஷன் கடையில் கோபி சார்ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் புதிய ரேஷன் கார்டுக்கான மனுக்கள் பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், செல்போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர்-ஈரோடு இடையே, வாராந்திர சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நாளை (டிச.11) முதல் மார்ச் 5 வரை புதன்கிழமைகளில் சம்பல்பூரில் இருந்து காலை 11:35 மணிக்கு புறப்படும் இரயில், மறுநாள் இரவு 8:30 மணிக்கு ஈரோடு வந்தடையும். மறுமார்க்கமாக டிச.13 முதல் மார்ச் 7 வரை வெள்ளிக்கிழமைகளில், ஈரோட்டில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11:15-க்கு சம்பல்பூர் சென்றடையும்.
ஈரோடு, விஜயமங்கலம் கள்ளியம்புதூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (90). கடந்த சில வருடங்களாக பழனிசாமி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனிடையே, தனது மகளுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, பழனிச்சாமி, சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மூங்கில்பாளையம் பஸ் நிறுத்தத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று பழனிசாமி படுத்திருந்த பாயில் தீப்பற்றியதில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட தினமான டிச.27ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா வரும் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சம்பத்நகர் நூலகத்தில் அரசுப்பணியாளர்களுக்கு பயிற்சியும், 23ஆம் தேதி கோபி கலை அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் பட்டிமன்றமும் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.