India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் இன்று 04-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது..
திண்டுக்கல் மாவட்டம் சில்வார்பட்டி பஞ்சாயத்து, அய்யம்பட்டி பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. அந்த கிணற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவன் பிரகாஷ் என்பவர் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை மீட்டனர். இதுகுறித்து
ரெட்டியார்சத்திரம்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்க வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் தெற்கு ஒன்றியம், சிறுமலை ஊராட்சியில் இன்று, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக கட்சி கொடி ஏற்றி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். உடன் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை,வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் (ம) உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்-நத்தம் சாலையில் சிறுமலை பிரிவில் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 20 வகையான இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அடுத்த மாதம் பிப்-3 முதல் 30 நாட்களுக்கு செல்போன் பழுதுபார்க்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி பயிற்சி நடைபெறும். உணவு, தங்கும் இடம், பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. 18 முதல்45 வயது இருபாலரும் பங்கேற்கலாம்.
திண்டுக்கல்லில் இன்று 03-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது..
திண்டுக்கல் சரக DIG-யாக வந்திதாபாண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் சரக DIG வந்திதா பாண்டே. பூர்வீகம் உத்தரப்பிரதேசம் அலகாபாத். தமிழக கேடரில் 2010ம் வருட ஐ.பி.எஸ். பேட்ஜ். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி, மக்களிடம் நல்ல பெயர் எடுத்தவர். காக்கிகளிடம் ரொம்ப கண்டிப்பானவர் என்று பெயர் எடுத்தவர்.
வேடசந்தூர் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு இடமாற்றம், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண்நாராயணன் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் மனோகரன் திண்டுக்கல் SJ&HR இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (KYC Update செய்ய வேண்டும் என வரும் போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாலை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தருமத்துப்பட்டி-ஆடலுார்-தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த 5.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் உள்ளூரில் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும்; சமூக, பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கும்.
Sorry, no posts matched your criteria.