India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.சி.ஏ.,எம்.பி.ஏ,பி.எட்., எம்.எட். உள்ளிட்ட 23 முதுகலை படிப்புகள் உள்ளது. இந்த படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை, பல்கலைக்கழக பொதுநுழைவுத்தேர்வு (கியூட்) மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. மேற்கண்ட முதுகலை பட்டப்படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் http://cuetpg.ntaonline.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்கள், கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் நேரடி மற்றும் தபால் மூலம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பலர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுவரை சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளது.
திண்டுக்கல்லில் இன்று (09.01.2025) முக்கிய நிகழ்வுகள்.➢வடமதுரை எஸ்.பாரைப்பட்டி, குரு பூஜை விழா புனித தீர்த்தம், பால், சந்தன குடம் ஊர்வலம், சங்கரானந்த சுவாமிகள் மடம், மதியம் 3:00 மணி. ➢பழனி திருஆவினன்குடி, குழந்தை வேலாயுதசுவாமி கோயில், சிறப்பு வழிபாடு காலை 9:00 மணி. ➢ ஜன.12ல் மாவட்ட சதுரங்க போட்டி நடைபெறவுள்ளது. ➢ திண்டுக்கல்லில் இன்று பல்வேறு பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (08.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (உங்களின் வங்கி கணக்கு எண், ATM அட்டை CVV எண் மற்றும் ரகசிய எண், ஆதார் எண் மற்றும் செல்போனுக்கு வரும் OTP எண் உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும், யாரிடமும் பகிர வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பொறியியல் கல்லூரிகள், 22 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்வி நிலையங்கள், 8 தொழிற்பயிற்சி நிலையங்கள், 10 பாலிடெக்னிக், 1சட்டக்கல்லூரி, 1 ஆசிரியர் பயிற்சி நிலையம், 1 பல்கலைக்கழகம், 8 பார்மசி, 3 வேளாண்மை கல்லூரிகள் என 75 கல்லூரிகளில் பயின்று வரும் 7,096 மாணவர்கள் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.
கொடைக்கானலில் வில்பட்டி- கோவில்பட்டி- புலியூர்- பகுதியில் புதிய சாலை அமைக்கத் தடை கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இது தொடா்பாக சுற்றுலாத் துறை ஆணையா் தலைமையில்அனைத்துத்துறை அலுவலா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கொடைக்கானலில் உள்ள வில்பட்டி-கோவில்பட்டி- புலியூர் பேத்துப்பாறை வழியாக மாற்றுப் பாதை அமைக்க முடிவு செய்தனர்.
தமிழக சட்டபேரவை 3ம் நாள் இன்று கூடியது. இதில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி, திண்டுக்கல்லில் 5.27 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 4 லட்சத்திற்கு அதிகமானோருக்கு வழங்கப்படுகிறது. வேடசந்தூரில் 62,000-த்திற்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றார். 3 மாதத்திற்குள் மீதம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறிய திருநங்கைகளுக்கான 2024-2025க்கான திருநங்கைகள் விருது வரும் ஏப்.15 அன்று வழங்கப்படும். தகுதி வாய்ந்த திருநங்கைகள் 10.02.25க்குள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று (08.01.2025) முக்கிய நிகழ்வுகள். ➢பழனி முருகன் கோயில், இரவு 7:00 மணி. தங்கரத புறப்பாடு. ➢வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி. ➢திண்டுக்கல் மலையடிவாரம் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை காலை 5:00 மணி, சிறப்பு பஜனை வழிபாடு, அன்னதானம், இரவு 8:00 மணி.
Sorry, no posts matched your criteria.